fbpx

சூப்பர் ஆக்ட்டிங்……! மனைவியை கொலை செய்து நாடகம் ஆடிய கணவர் காவல்துறையிடம் சிக்கியது எப்படி…..?

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (27). இவருடைய மனைவி வெண்ணிலா (24) இந்த தம்பதிகள் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், சந்தோஷ் வேலைக்கு செல்லாமல் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக, கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வழக்கம்போல கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட சந்தோஷ் துப்பட்டாவால் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறார். இதற்கு நடுவே வெளியே சென்ற குழந்தைகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தாய் மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதை கண்டு அழுதுள்ளனர்.

குழந்தைகள் அழும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து பார்த்தபோது வெண்ணிலா கொலை செய்யப்பட்டிருக்கிறார். என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறிப்பு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கணவர் நாடகமாடியுள்ளார்.

ஆனால் வெண்ணிலாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த விதமான அடையாளமும் காணப்படவில்லை. இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் வெண்ணிலாவின் கணவரை விசாரித்த போது மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார் இதனைத் தொடர்ந்து சந்தோஷ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Next Post

விதவைப் பெண்களே..!! உங்களுக்கு இன்னும் பணம் வரவில்லையா..? உடனே இதை பண்ணுங்க..!!

Fri Jun 2 , 2023
இந்தியாவில் விதவைப் பெண்களுக்கு வித்வா யோஜனா பென்ஷன் திட்டத்தின் கீழ் அரசு தரப்பில் இருந்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள விதவைகளுக்கு இந்த ஓய்வூதியமானது கிடைக்கிறது. விதவைப் பெண்களுக்கு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளுக்கு அவர்களுக்கு 25 வயது ஆகும் வரை ஓய்வூதியம் கிடைக்கும். ஒருவேளை அந்த பெண்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் 65 வயது […]

You May Like