கொரோனா அறிகுறிகளுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் பலருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது.. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. இதே போல் பால் வளத்தூறை அமைச்சர் நாசருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.. மேலும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..
இந்நிலையில் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்திற்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தூள்ளது..
மருத்துவ நிபுணர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் விரைந்து நலம் பெற விழைவதாக முதலமைச்சர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்..