fbpx

இது எப்படி?… பெயரே இல்லாமல் விசில் மூலம் பேசிக்கொள்ளும் மக்கள்!… இந்தியாவில் இப்படியொரு அதிசய கிராமமா?

மேகாலயா மாநிலத்தில் மற்றவர்களை அழைப்பதற்கு விதவிதமாக விசில் போடும் பழக்கம் தற்போது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள இசை கிராமத்தின் பெயர் காங்தோங். பொதுவாக ஒருவரை அழைப்பதற்கு அவருக்கென்று இருக்கும் பெயரை சொல்லி தான் அழைப்பது வழக்கம். ஆனால், இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தங்களது பெயரையே மறந்துவிட்டு, ஒருவருக்கொருவர் விசில் அடிப்பது போன்ற குரலிசையால் தான் அழைத்துக் கொள்கின்றனர். ஒருவருக்கொருவர் மாறுபடும் இந்த குரல் ஓசை கேட்போரை மயங்க வைக்கிறது.

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள கோங்தாங் கிராமம், மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் பெயர்களாக விசில் இசையைக் கொண்டுள்ளதால் கோங்தாங் கிராமம் விசில் கிராமம் அல்லது பாடும் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.

இந்த குரல் இசையை தங்களது பாரம்பரியமாக இந்த கிராம மக்கள் கருதி வருகின்றனர். மேலும், பிறந்த குழந்தைகளுக்கும் இந்த முறையை கற்றுத் தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது மகன்கள் மீது கோபம் அடைந்த போது தான் அவர்களது பெயரைச் சொல்லி அழைப்பதாக தாய்மார்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கிராம மக்கள் ஹாசி பழங்குடியின மக்கள் என்றழைக்கப்படுகின்றனர். இந்த குரல் இசைக்கு ஜிங்கிர்வை லாபே என்று பெயரிட்டுள்ளனர். இந்த கிராமம் விசிட்லிங் வில்லேஜ் ஆஃப் இந்தியா என்று பிரபலமடைந்துள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இந்த இசைப் பெயர்களின் இரண்டு பதிப்புகள் உள்ளன – நீண்ட மற்றும் குறுகிய பெயர்கள். நீளமானது பிறக்கும்போது கொடுக்கப்பட்ட பெயர், மற்றும் அதன் குறுகிய பதிப்பு பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அழகான பாரம்பரியம் ஜிங்ர்வாய் லாபே என்று அழைக்கப்படுகிறது , அதாவது குல பெண்ணின் பாடல் என்று பொருள். மரபின் படி, குழந்தை பிறப்பதற்கு முன்னரே தாய் தனது குழந்தைக்காக ஒரு ட்யூனை தயார் செய்கிறார். குழந்தை பிறந்த உடன் அதனுடைய காதுகளில் தாய் இந்த ட்யூனை பாடினால் அது உடனே குழந்தையின் பெயராகி விடுகிறது.
அந்த ட்யூனை வேறு யாருக்கும் வைக்க முடியாது. அந்த குழந்தைக்கு மட்டும் சொந்தமாகும். அதனால் புதிய புதிய ட்யூன்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த தனித்துவமான பெயர்களை தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு வைக்க முடியுமாம்.

அது போக இவர்களுக்கும் தனியாக குடும்ப பெயர்களை சுட்டும் ட்யூன்கள் இருக்கிறதாம். தனிப்பட்ட ட்யூனோடு அதையும் இணைத்துக் கொள்வார்களாம். அதேபோல சில நேரங்களில் காட்டிற்குள் இருக்கும் போது தங்களுக்குள் பேசி கொள்வதற்கும் இசை மொழிகளை பயன்படுத்துகின்றனர். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ விசிலடித்துக்கொண்டு போகிறார்கள் என்று தான் தோன்றும் ஆனால் அவர்கள் ரகசியம் பேசிக்கொண்டு இருப்பார்கள்

Kokila

Next Post

கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கல்லூரியை சூறையாடிய மாணவர்கள்….! கல்லூரி நிர்வாகம் எடுத்த அதிரடி ஆக்சன் கொந்தளிப்பில் மாணவிகள்….!

Sun Sep 10 , 2023
தற்போதைய காலகட்டத்தில், பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்குவது வழக்கமாகி வருகிறது. படிப்பதற்காக, ஆசிரியர்களை நம்பி செல்லும் மாணவிகளை, பாலியல் தொல்லை வழங்கி, அவர்களை துன்புறுத்தும் விதமாக ஆசிரியர்கள் நடந்து கொள்வது வேதனைக்குரிய விஷயமா உள்ளது. அந்த வகையில், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த கௌரவ விரிவுரையாளருக்கு தர்ம அடி கொடுத்த 16 மாணவர்களை, இடைநீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தின் […]

You May Like