இங்கிலாந்து மருத்துவ துறையின் புதிய முயற்சியாக மூன்று பேரின் DNA-களுடன் முதல் முறையாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த குழந்தை கருக்களை உருவாக்குவதற்கான சிறப்பு ஐவிஎஃப் (IVF) நுட்பத்தைப் பயன்படுத்தியும், மைட்டோகாண்ட்ரியல் டொனேஷன் மூலமாகவும் பிறந்துள்ளது. மைட்டோகாண்ட்ரியல் டொனேஷன் என்பது ஒரு துணை இனப்பெருக்க தொழில்நுட்பமாகும். இது குழந்தைகளுக்கு பலவீனம் மற்றும் பக்கவாதம் போன்ற மைட்டோகாண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கும் முயற்சியைக் நோக்கமாக கொண்டுள்ளது. இந்தசெயல்முறையில், 99.8% DNA இரண்டு குழந்தையின் பெற்றோரிடமிருந்தும் மீதமுள்ள 0.1% DNA ஒரு பெண் நன்கொடையாளரிடமிருந்து வந்துள்ளது. அதாவது இக்குழந்தையின் டிஎன்ஏவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் அந்த குழந்தையின் பெற்றோர்கள் உடையதுதான். ஆனால் 0.1 சதவீதம் மட்டும் மூன்றாம் நபருடையது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொழில்நுட்பம் மூலம் குழந்தையை உருவாக்கும் முதல் நாடு இங்கிலாந்து அல்ல. இந்த மருத்துவமுறையில் உலகில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. அனால் மூன்று பேரின் டி.என்.ஏ (DNA) மூலம் தற்போது தான் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் மெக்சிகோவில் இதே போல ஒரு குழந்தை பிறந்துள்ளது. அதாவது பிரிட்டனில் 2015 ஆம் ஆண்டுதான் இத்தகைய குழந்தைகள் பிறக்க அனுமதிக்கும் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைக்கு தாய், தந்தை மற்றும் கருமுட்டை தானமாக அளிக்கும் பெண் ஆகிய 3 பேரின் டி.என்.ஏ.க்களைப் பெற்றிருக்கும். மரபணு சங்கிலியில் செய்யப்பட்ட இந்த மாற்றம், நிரந்தரமாக அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கும் வழிவழியாக கடத்தப்படும்.