நடப்பு கல்வியாண்டில் 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகளவாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. கடும் வெயிலால் மக்கள் பல்வேறு கட்ட இன்னல்களை சந்தித்தனர். தற்போது தான், தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்து மக்களை வெப்பத்தில் இருந்து தணித்து வருகிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கத்தால், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டு, நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது. ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக 4 நாட்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இந்நிலையில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவித்துள்ளது. செப்டம்பர் 29 முதல் அக்டோர் 2 வரை காலாண்டு விடுமுறையும், டிசம்பர் 24 முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை அரையாண்டு விடுமுறையும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Read More : நீங்கள் அதிக நேரம் காரில் பயணிப்பவரா..? புற்றுநோய் ஏற்படும் அபாயம்..!! வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!