என்ன தான் நம் நாட்டிலேயே அனைத்து பொருட்களும் கிடைத்தாலும், வெளிநாட்டு பொருட்கள் மீதான மோகம் மட்டும் இன்னும் மக்களிடம் குறைந்தபாடில்லை.. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வமாக இருக்கின்றனர்.. தூய்மை, தரம், மலிவான விலை என பல்வேறு காரணங்கள் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.. அதுவும் துபாய் நாட்டில் தங்கம் வாங்குவதற்கே அதிகமானோர் விரும்புவதாக கூறப்படுகிறது..
தீபாவளி, தசரா போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் துபாயில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுவதாக கூறப்படுகிறது.. விலையை பொறுத்த வரை இந்தியாவுக்கும் துபாய்க்கும் தங்கம் விலையில் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் கூறப்படுகிறது..
இதனிடையே கடந்த ஜூலை மாதம், தங்கத்திற்கான இறக்குமதி வரியை 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரித்தது.. எனினும் துபாய் தங்கம் தரமானதாக இருப்பதால் அதிகளவில் தங்கம் வாங்குகின்றனர்.. எனவே நீங்கள் துபாயில் தங்கம் வாங்குவோர் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்களை பார்க்கலாம்..
குறைந்தது ஒரு ஆண்டாவது துபாயில் தங்கியிந்தால் மட்டுமே, அங்கிருந்து இந்தியாவுக்கு தங்கம் வாங்கி கொண்டு வர முடியும்.. அதன்படி, 1 கிலோ வரை தங்கம் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது.. எனினும் ஆனால் முறையான ஆவணங்கள், ரசீதுகள் மற்றும் பில்களை இல்லயெனில் சுங்கவரித்துறையினரின் அபராதத்திற்கு ஆளாக நேரிடும்..
அதே நேரத்தில் சுற்றுலா அல்லது விடுமுறையை கழிக்க துபாய் சென்று தங்க நகைகளை வாங்கி வரும் போது சுங்க வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கினால் அபராதம் செலுத்த வேண்டும்.. அதாவது 36.05 சதவீதம் சுங்க வரி மற்றும் இறக்குமதி வரியாக 15 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும்..
இதுதவிர தங்கத்தின் எடை, தூய்மை மற்றும் சரியான ஆவணங்கள் இல்லை என்றால், நகைகள் பறிமுதல் செய்யப்படலாம்.. ரத்தினங்கள்,வைரங்கள் மற்றும் முத்துக்கள் பதித்த தங்கநகைகளை துபாயிலிருந்து எடுத்து வர அனுமதி கிடையாது..
இந்தியப் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கொண்டு வர, சுங்கத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. அதன்படி ஆண் பயணிகள் 20 கிராம் தங்க நகைகள் மற்றும் 50,000 ரூபாய்க்கு மிகாமல் கொண்டு வரலாம். அதே சமயம் பெண் பயணிகளாக இருந்தால் ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் நகைகளை கொண்டு வர அனுமதி உண்டு.. தம்பதிகளாக இருக்கும் பட்சத்தில்ல் 60 கிராம் நகைகள் மற்றும் 1.5 லட்ச ரூபாய்க்கு மிகாமல் நீங்கள் எடுத்து வர முடியும்.