பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. தங்கள் கைகள், கருவிகளால் வேலை செய்யும் கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரதமரின் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை மூலம் அங்கீகாரம், திறன் மேம்பாடு, கருவிகள் வாங்குவதற்கான ஊக்கத்தொகை, கடன் ஆதரவு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை, சந்தைப்படுத்தல் ஆதரவு ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 30.01.2024 வரை பிரதமரின் விஸ்வகர்மா இணையதளத்தில் பதிவுகளின் எண்ணிக்கையில் மாநிலங்கள் / யூனியன் […]

ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் அமெரிக்காவில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தனது உயிரை காப்பாற்ற வேண்டி, அந்த மாணவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது . தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் இந்தியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இவரை […]

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும், நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் ‘தற்சார்பு இந்தியா’ தொலைநோக்குப் பார்வையை அடைவதில் நிலக்கரி அமைச்சகம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இந்த இலக்குகளை அடைவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அமைச்சகம் எட்டியுள்ளது. தடையற்ற நிலக்கரி விநியோகத்தைத் தக்கவைப்பதற்கான அமைச்சகத்தின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது.23.08.23 நிலவரப்படி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து போன்றவற்றில் மொத்த நிலக்கரி இருப்பு […]

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா சாதாரண இருதரப்பு தொடரில் மிரட்டலாக செயல்பட்டாலும் அழுத்தமான நாக் அவுட் போட்டிகளில் முக்கிய தருணங்களில் சொதப்பி கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருந்து வருகிறது. இதற்கு சுமாரான அணித்தேர்வு, பும்ரா போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்கள் காயமடைந்து வெளியேறுவது போன்றவை காரணமாக இருந்தாலும் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக ரசிகர்கள் கொண்டாடும் […]

2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் சியோமி நிறுவனத்தில் சுமார் 1500 பேர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய நிலையில், தற்போது ஊழியர்கள் எண்ணிக்கை 1000த்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 30 பேரை பணிநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. மேலும் இனி வரும் காலத்திலும் அதிகப்படியானோர்-க்கு பிங்க் ஸ்லிப் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொடிக்கட்டி பறந்து வந்த சியோமி கடந்த 2 வருடத்தில் […]

பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ராணுவ விவகாரங்கள் துறை உள்நாட்டு ராணுவ படைப்பிரிவில் ஏற்கனவே உள்ள விதிகளில் பெண் அதிகாரிகளின் பணிகள் குறித்த திருத்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. உள்நாட்டு ராணுவத்தில் 2019-ம் ஆண்டு முதல் பெண் அதிகாரிகள் சுற்றுச்சூழல் பணிக்குழு பிரிவுகள், எண்ணெய்த்துறை பிரிவுகள் மற்றும் ரயில்வே பொறியியல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்தக் காலகட்டத்தில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், உள்நாட்டு ராணுவத்தில் […]

சூடானில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்து காணொலிக்காட்சி வாயிலாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார். சூடானில் மிக சமீபத்தில் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் அங்குள்ள உண்மையான களநிலவரம் குறித்து நேரடி தகவல்களை பிரதமர் கேட்டறிந்தார். குறிப்பாக அந்த நாட்டில் வாழ்ந்து வரும் 3,000-க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சூடானில் வாழும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்த […]

இந்தியா- சிங்கப்பூர் இடையே யு.பி.ஐ., பண பரிவர்த்தனை முறை மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோர் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையேயான எல்லைதாண்டிய இணைப்புச் சேவைகளான இந்தியாவின் UPI முறை மற்றும் சிங்கப்பூரின் பேநவ் ஆகியவற்றை இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த சேவையை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் […]

இந்திய ராணுவத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது இதன்படி வெவ்வேறு துறைகளில் காலியாக உள்ள 135 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 03.03.2023 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த அறிவிப்பின்படி இந்திய ராணுவத்தில் கிளீனர், மெசஞ்சர், மெஸ் வெயிட்டர், பார்பர், வாசர் மென் மற்றும் குக் ஆகிய […]

ஸ்பிரிங்க்ளர் நிறுவனம் 4% ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான ஸ்பிரிங்க்ளர் அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 4 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நிறுவனம் கடந்த வாரம் பணிநீக்க வேலைகளை தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் அதன் […]