fbpx

சீன படகு வேதாரண்யத்தில் கரை ஒதுங்கியது எப்படி.. நாகையில் பரபரப்பு..!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முனாங்காடு பகுதியில், காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகு ஒன்று இன்று காலை கரை ஒதுங்கியது. இதுபற்றி தகவலறிந்த கடலோர காவல்படை காவல்துறையினர், விரைந்து வந்து அந்த ரப்பர் படகை சோதனையிட்டனர். சேதனை சொய்ததில் அந்த படகு சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

மேலும் கரை ஒதுங்கிய அந்த படகு பதிமூன்று அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்டது. அந்த படகில், படகு துடுப்பு, லைஃப் ஜாக்கெட், தண்ணீர் பாட்டில்கள்,டிராவல் பேக், ஒரு ஜோடி காலணிகள் ஆகியவை இருந்தன. இதற்கிடையில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் கடற்படை அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். நாகையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

மோப்ப நாய் படகை மோப்பம் பிடித்து அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்றது. இலங்கையில் இருந்து காற்று நிரப்பப்பட்ட ரப்பர் படகில் மர்ம நபர்கள் யாராவது வேதாரண்யத்தில் நுழைந்துள்ளார்களா, அல்லது கடத்தல்காரர்கள் யாரேனும் வந்தார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

அப்படி போடு... இனி ஒரு மணி நேரம் முன்னதாக ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும்...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Mon Jul 25 , 2022
ஆசிரியர்கள், பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் ,முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும். அனைத்து பள்ளி […]

You May Like