சீனா சென்ற ஸ்பைஸ்ஜெட் சரக்கு விமானம் கொல்கத்தா திரும்பியது.. கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 3வது சம்பவம்

மோசமான வானிலை காரணமாக சீனா சென்ற ஸ்பைஸ்ஜெட் சரக்கு விமானம் கொல்கத்தா திரும்பியது.

ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 சரக்கு விமானம் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் சோங்கிங்கிற்கு இயக்க திட்டமிடப்பட்டது. புறப்பட்ட பிறகு, வானிலை ரேடார் வானிலையைக் காட்டவில்லை. எனவே மீண்டும் கொல்கத்தாவிற்கு திரும்ப முடிவு செய்தது. விமானம் கொல்கத்தாவில் பத்திரமாக தரையிறங்கியது” என்று தெரிவித்துள்ளார்..

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும்.. நேற்று டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.. அந்த விமானத்தின் எரிபொருள் காட்டி செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது என்று கூறப்பட்டது.. இதே போல் நேற்றிரவு மும்பையில் இருந்து புறப்பட்ட மற்றொரு ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் கண்ணாடியின் நடுவில் விரிசல் ஏற்பட்ட பின்னர் மும்பையில் அவசரமாக தரையிறங்கியது.

முன்னதாக கடந்த 1 மாதத்தில் மட்டும் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன.. ஜூன் 19 அன்று, 185 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் டெல்லி நோக்கிச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம், பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.. இதே போல் கடந்த 2-ம் தேதி நடுவானில் பறந்தபோது கேபினில் இருந்து புகை வந்ததால் ஜபல்பூர் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதால் காதல் ஜோடி, ரயில் முன் குதித்து தற்கொலை..!

Wed Jul 6 , 2022
உத்தரபிரதேச மாநிலம் இட்டாவாஹ் மாவட்டம் ராம்நகர் பகுதியில் வசித்து வருபவர் விமல் குமார் (25). அதேபகுதியை சேர்ந்த மான்சி (22) என்ற பெண்ணும், விமல் குமாரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, விமல் குமாருக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்தனர். மான்சியை காதலித்து வந்ததால் இந்த திருமணத்தில் விமல் குமாருக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், விமல் குமாரும் அவரது காதலி மான்சியும் நேற்று அதிகாலை யாருக்கும் […]

You May Like