ஆதார் அட்டை இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். அரசின் திட்டங்களை பெறுவது தொடங்கி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை அனைத்திற்குமே ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. எனினும் வெளிநாடுகளில் வசிக்கும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா இல்லையா என்பது பலரின் சந்தேகமாக உள்ளது.. ஆனால் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டைக் கொண்ட என்ஆர்ஐ எந்த ஆதார் மையத்திலிருந்தும் விண்ணப்பிக்கலாம் என்பதை UIDAI உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஆதார் அட்டையைப் பெறுவதற்கு ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை UIDAI குறிப்பிட்டுள்ளது:
- உங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்தைப் பார்வையிடவும்
- உங்கள் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்ல வேண்டும்.
- பதிவு படிவத்தில் உங்கள் விவரங்களை நிரப்பவும்
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் மின்னஞ்சல் ஐடியைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்
- உங்களை NRI ஆக பதிவு செய்ய வேண்டும்..
- அடையாளச் சான்றுக்கு, உங்கள் பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும்..
- அடையாளச் சான்றுக்குப் பிறகு, பயோமெட்ரிக் செயல்முறையை முடிக்கவும்
- அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்
- உங்கள் 14 இலக்க பதிவு ஐடி மற்றும் தேதி மற்றும் நேர முத்திரையைக் கொண்ட ரசீது அல்லது பதிவுச் சீட்டு சேமிக்கப்பட வேண்டும்.
அனைத்து செயல்முறைகளையும் முடித்த பின்னர் myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப நிலையைச் சரிபார்க்கலாம். இருப்பினும், உங்கள் பாஸ்போர்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ள முகவரி மாறியிருந்தால், UIDAI-ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலுக்கு இணங்க தற்போதைய முகவரிச் சான்று ( Proof of Address – PoA ) உடன் புதுப்பிக்கப்பட்ட இந்திய முகவரியை நீங்கள் வழங்க வேண்டும்.