பொதுவாக நம் அனைவருக்குமே ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு. அந்த வகையில் நம் உடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது குடல் தான். குடலில் எந்த வித நோய் தாக்கமும் இல்லாமல் இருந்தால்தான் மற்ற உறுப்புகளும் சீராக செயல்பட முடியும். அப்படி இருக்க நம் குடலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
நாம் உண்ணும் உணவுகளின் மூலமும், வயிற்றில் இருக்கும் அமிலங்களின் மூலமும் குடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் நல்ல பாக்டீரியாவும் உண்டு. கெட்ட பாக்டீரியாவும் உண்டு. நல்ல பாக்டீரியா நம் உடலில் உள்ள அமிலங்களை சீர்படுத்தி செரிமானத்திற்கு உதவி புரிகிறது. கெட்ட பாக்டீரியா மலச்சிக்கல், வயிறு மந்தம், அஜீரணம், எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் ஏற்படுகிறது.
மேலும் குடலில் உள்ள புழுக்களையும், நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களையும் அழிப்பதற்கு ஆயுர்வேதத்தில் பல மருந்துகள் இருந்தாலும் இந்த “சாமியார் தைலம்” என்ற மருந்து மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. இந்த மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலம் ஒரே நாளில் குடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறி மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்து செரிமான மண்டலத்தை சீர்படுத்துகிறது.
குறிப்பிட்ட நாட்டு வைத்திய கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த சாமியார் தைலத்தை காலையில் எழுந்ததும் சாப்பிட்டு முடித்த பின் குடிக்க வேண்டும். குடித்த பிறகு குடலில் உள்ள நச்சுக்கள், பாக்டீரியாக்கள், கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும் என்று சித்த வைத்திய மருத்துவர் குறிப்பிட்டு இருக்கிறார்.