fbpx

உங்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டுமா……? அப்படி என்றால் இதை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்……!

நம்மில் பலர் உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருப்போம். ஆனால் நம்முடைய முயற்சிகள் எதுவுமே நமக்கு கை கொடுத்திருக்காது. பின்பு பல்வேறு மருத்துவ ஆலோசனைகளை பெற்று, அதன்படியும் நாம் செயல்பட்டு இருப்போம். ஆனாலும் எந்தவித பலனும் கிடைத்திருக்காது.

ஆனால் இந்த செய்தி குறிப்பில் வந்திருக்கும் ஒரு கட்டுரை உங்களுக்கு, எடை குறைப்புக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். ஆகவே இதை நிச்சயம் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உடல் எடை குறைப்புக்கு அக்ரூட் போன்ற பருப்புகளை உட்கொள்வதால் எடை அதிகரிக்கும் என்று பலரும் பயப்படுகிறார்கள். ஆனால், அக்ரூட் பருப்பில் கால்சியம், இரும்பு சத்து, பொட்டாசியம், துத்தநாகம் அதோடு, நல்ல கொழுப்புகள் உள்ளிட்டவை நிறைவாக இருக்கின்றன. இதனை சரியான முறையில் கொண்டால் இது ஒருவரின் எடை குறைப்புக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும். அக்ரூட் பருப்புகளை சரியான முறையில் சாப்பிட்டு வந்தால், கிடைக்கும் பலன்களை நிச்சயமாக நாம் பெறலாம்.

உடல் எடையை குறைப்பதற்கு முயற்சி செய்பவர்கள் அக்ரூட் பருப்புகளை நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கின்ற ஆரோக்கியமான கொழுப்புகள் உடல் எடையை குறைப்பதற்கு உதவிகரமாக இருக்கும். இதில் காணப்படும் நார்சத்து மற்றும் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன. இதை சரியான முறையில் சாப்பிட்டு வந்தால், இதய நோய், சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக தடுக்க முடியும்.

அக்ரூட் பருப்புகளில் காணப்பட்டுவரும் பைட்டிக் அமிலம் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை குறைக்கிறது. அதனை தடுப்பதற்கு அக்ரூட் பருப்புகளை எப்போதும் நன்றாக ஊற வைத்து சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது. இதை இரவு வேளையில் நன்றாக ஊற வைத்து, அதன் பிறகு காலை வேளையில் எழுந்தவுடன் சாப்பிட்டுப் பாருங்கள்.

இப்படி ஊற வைப்பதால், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் சிறப்பாக காணப்படும். பலவீனமான செரிமான திறன் இருப்பவர்களுக்கு இதை சாப்பிட்டால் உடலின் வெப்பத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அன்றைய நாள் முழுவதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்படலாம். அதோடு, இதில் இருக்கின்ற தாதுக்கள் நல்ல உறக்கத்தை கொடுக்க வல்லது.

Next Post

பி.எஸ் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்த சென்னை ஐஐடி...! 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Sat Aug 5 , 2023
சென்னை ஐஐடி, பி.எஸ் (எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்) பாடத்திட்டத்தை நடத்துகிறது. மின்னணுவியல் உற்பத்தித் துறையில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் இந்தப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மின்னணுத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த 4 ஆண்டு பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 27 ஆகஸ்ட் 2023 அன்று கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் https://study.iitm.ac.in/es/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்

You May Like