fbpx

இரவில் கால் பிடிப்பு பிரச்சனையால் கஷ்டப்படுறீங்களா.! இதுக்கு என்ன காரணம் தெரியுமா.?!

இரவு நேரத்தில் தூங்கும் போது ஒரு சிலருக்கு காலில் நரம்பு இழுத்துக் கொண்டு கால் பிடிப்பு பிரச்சனை ஏற்படும். இது ஒரு சில நேரங்களில் மிகுந்த வலியுடன், பிடிப்பு ஏற்பட்டு பின்பு சரியாகும். கால் பிடிப்பு ஏற்படுவதற்கான காரணத்தையும், அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை குறித்தும் பார்க்கலாம்?

கால் பிடிப்பு ஏற்படுவதற்கான காரணம்: நரம்பு இழுத்துக் கொண்டு கால் பிடிப்பு ஏற்படுவது சாதாரண பிரச்சனை தான் என்றாலும், அந்த நேரத்தில் ஏற்படும் வலி மிகப் பெரியது. உடலில் போதுமான அளவு சத்துக்கள் இல்லாததால் தான் இந்த கால் பிடிப்பு பிரச்சனை ஏற்படுகின்றது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக வைட்டமின் பி12 சத்து உடலில் குறைவாக இருப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

வைட்டமின் பி12 சத்து உடம்பில் நரம்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. அப்படியிருக்க வைட்டமின் பி12 சத்து உடம்பில் குறையும் போது நரம்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையும், கால் பிடிப்பு, கால் வீக்கம் போன்ற பிரச்சினைகளும் உருவாகிறது. இந்த மாதிரி பாதிப்புகள் உடலில் ஏற்படாமல் தவிர்க்க வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

போதுமான அளவு ஊட்டச்சத்தும், போதுமான அளவு தண்ணீரும் உடலில் இருந்தால் கால் பிடிப்பு பிரச்சனைகள் ஏற்படாது. மேலும் அசைவ உணவுகளில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. சைவ உணவுகளில் பால் பொருட்கள், உலர் பழங்கள், கீரைகள் போன்றவற்றில் வைட்டமின் பி12 சத்துக்கள் உள்ளது. மேலும் வைட்டமின் பி 12 சத்துக்கள் உடலில் குறைந்தால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுவதோடு நினைவாற்றல் பாதிக்கப்படும், சுவை, வாசனை போன்ற செயல் திறன்களை இழக்க நேரிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் பலவீனப்படும். இவற்றை தவிர்க்க வைட்டமின் பி12 சத்துக்களை மாத்திரையாகவோ உணவின் மூலமாகவோ எடுத்துக் கொள்ள வேண்டும்.

Rupa

Next Post

2024ல் எச்சரிக்கை!… பூமியை தாக்கும் 2 சூரிய புயல்கள்!.. என்ன ஆபத்துகள் நிகழும்?

Wed Jan 17 , 2024
இந்த ஆண்டில் ஆபத்தான 2 சூரிய புயல்கள் வரும் என்றும் இதனால் பூமியில் எங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து ஆய்வாளர்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த ஆண்டு நான்கு கிரகணங்கள் நடக்கவுள்ளன, மேலும் விண்கற்கள் மற்றும் சிறுகோள்கள் பூமியை நோக்கி அவற்றின் மின்னும் விளக்குகளுடன் நகரும் காட்சி மக்களை ஈர்க்கும். இது தவிர, இந்த ஆண்டு இரண்டு சூரியப் புயல்களும் வரப் போவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியப் புயல்கள் […]

You May Like