குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்றாகும். குழந்தைகள் தங்களை நம்பவும், சவால்களை சமாளிக்கவும், நேர்மறையான அணுகுமுறையுடன் வாழ்க்கையைப் பார்க்கவும் இது உதவுகிறது. குழந்தைகளின் நம்பிக்கையை மேம்படுத்த உதவும் சில டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு சவால்களைக் கையாளும் திறன் குறித்து எப்போதும் சந்தேகம் இருக்கும். குறிப்பாக அவர்கள் புதிய அல்லது கடினமான ஒன்றை எதிர்கொள்ளும் போது சந்தேகம் இருக்கும். ஆனால் குழந்தைகள் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்டவர்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுவது மிகவும் முக்கியம்.
இதன் மூலம் தன்னம்பிக்கை உடன் புதிய வேலையை செய்து முடிக்க முடியும். விடாமுயற்சி உடன் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
குழந்தைகள் பொதுவாக தங்களின் மதிப்பெண் அல்லது கிரேடு அல்லது சாதனைகள் ஆகியவை மூலமே தங்கள் சுய மதிப்பை மதிப்பிடுவார்கள். ஆனால் குழந்தைகள் எப்படி இருந்தாலும் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். உதாரணமாக மதிப்பெண் எடுக்க வில்லை என்றால் அவர்களிடம் இருக்கும் மற்ற நேர்மறை விஷயங்களை நினைவூட்டி அவர்களை பாராட்ட வேண்டும்.
தோல்வி பயம் குறித்த பயம் அனைத்து குழந்தைகளுக்குமே இருக்கும். ஆனால் தோல்வி என்பது கற்றலின் இன்றியமையாத பகுதி என்பதை அவர்களுக்குக் சொல்லிக் கொடுப்பது அவசியம். இது அவர்களின் மனநிலையை மாற்றும். அவர்கள் தவறு செய்வதாலும் பரவாயில்லை, தவறுகளில் இருந்தே கற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இது அவர்களின் மன வலிமையை அதிகரிக்கும்.
புதிய அனுபவங்கள் குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம், அது புதிய வகுப்பில் சேர்ந்தாலும் சரி அல்லது ஒரு புதிய செயல்பாட்டை முயற்சித்தாலும் சரி குழந்தைகள் அதற்கு பயப்படலாம். ஆனால் அவர்களின் துணிச்சலை அதிகரிக்கவும், முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை தைரியமாக எதிர்கொள்ளவும் கற்று கொடுங்கள்.
முயற்சி செய்வதில் தவறு இல்லை என்பதை புரிய வையுங்கள். இந்த நேர்மறையான வலுவூட்டல், அவர்கள் புதிய சவால்களை ஏற்றுக்கொள்ள உதவும்.
குடும்ப விவாதங்கள் அல்லது முடிவுகளின் போது, உங்கள் பிள்ளைகளை ஈடுபடுத்துங்கள். உனக்கு எதுவும் தெரியாது என்பது போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறாமல், உனது யோசனைகள் முக்கியம், உங்கள் குரல் முக்கியமானது, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கேளுங்கள்.
இந்த நடைமுறை நம்பிக்கையை வளர்ப்பது மட்டுமல்லாமல், தகவல்தொடர்பு மற்றும் சுய வெளிப்பாட்டின் மதிப்பையும் அவர்களுக்குக் கற்பிக்கிறது.
குழந்தைகளுக்கு ஏன் தன்னம்பிக்கை அவசியம்?
தன்னம்பிக்கை என்பது இளைஞர்கள் சவால்களை நிர்வகிக்கவும், தங்களை வெளிப்படுத்தவும், அவர்களின் முழு திறனை அடையவும் உதவும் ஒரு அத்தியாவசிய வாழ்க்கைத் திறமையாகும். குழந்தைகளிடம் நம்பிக்கையை வளர்ப்பது ஒரு நேர்மறையான அடித்தளத்தை உருவாக்குகிறது.