கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். நேற்று நள்ளிரவு, வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, இவரது கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அப்போது காற்று பலமாக வீசியதால் மங்கள லட்சுமி முத்துலட்சுமியின் வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து அலறியடித்து வெளியே ஓடினர், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும், இந்த தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.