மின் இணைப்புடன் ஆதார் இணைக்க சிறப்பு முகாம், மற்றும் சிறப்பு இணையதளம் மூலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டில் வசிப்பவர்களின், தமிழகத்தில் உள்ள அவர்களுது வீட்டின் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் எவ்வாறு இணைப்பது என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆதார் எண்ணை இணைக்கும் இணையதள பக்கத்தில் 4வது ஆப்ஷனாக என்.ஆர்.ஐ. பதிவிற்கான புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் வசிப்பவர்களும் தங்கள் வீட்டின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.