அடுத்த 5 ஆண்டுகளுக்கு 3,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ள நிலையில், யூனிட் ஒன்றுக்கு ரூ.9 முதல் ரூ.20 வரை ஏலங்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோடைக்கால மின் தேவையை சமாளிக்கவும், கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு கோடைக்கால மின் தேவையை சமாளிக்க குறைந்த விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது. கடந்த கால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அண்மைக்காலமாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு நீடித்து வருவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரங்களில் நிலவும் மின்தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் மின்தடையால் தொழில் மற்றும் விவசாயத்துறைகளும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. பொதுமக்களின் தொடர் புகார்களை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 23-ஆம் […]