fbpx

தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவை எப்படியெல்லாம் சந்தோஷப்படுத்தலாம்?

இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க ஆசைப்பட்டால் அதற்காக நாங்கள் சில ஐடியாக்களை உங்களுக்கு சொல்லுகிறோம். இந்த ஐடியாக்கள் உங்களுக்கு பல விதங்களில் கை கொடுக்கும். இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவிற்கு நீங்கள் நிறைய சர்ப்ரைஸ் கொடுத்து அவரை நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் நிறைய மெனக்கெடல்களை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களே உங்கள் அப்பாவை மகிழ்ச்சியாக வைக்கும். சரி வாங்க இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவை எப்படியெல்லாம் சந்தோஷப்படுத்தலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

நீங்கள் விரும்பும் ஒரு நபருக்கு பரிசுப் பொருட்கள் தான் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்களுக்கு பிடித்த விஷயங்களைக் கூட நீங்கள் செய்து கொடுக்கலாம். எனவே இந்த தந்தையர் தினத்தில் உங்கள் அப்பாவுக்கு பிடித்த தின்பண்டங்கள், விருந்துகள் மற்றும் உணவுகளை சமைத்து சர்ப்ரைஸ் செய்யலாம். நீங்களும் அவரும் இணைந்து சாப்பிடும் போது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

தினசரி உங்கள் அப்பா அதிகமான வேலைகளை செய்து வருகிறார் என்றால் அவருக்காக நீங்கள் சில வேலைகளை செய்து கொடுக்கலாம். அவருடன் சேர்ந்து தோட்டத்தை பார்த்துக் கொள்வது, வீட்டை சுத்தம் செய்வது, கார் மற்றும் பைக் வாகனங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை அவருக்கு செய்து கொடுக்கலாம். இதன் மூலம் அவருக்கு சிறிது ஓய்வு கிடைக்கும். அவர் ஓய்வெடுக்கும் சமயத்தில் இருவரும் இணைந்து மனம் விட்டு பேசி மகிழலாம். இது அவருக்கு மிகுந்த சந்தோஷத்தையும் மிகுந்த உற்சாகத்தையும் அளிக்கும்.

அவருக்கு பிடித்தமான ஒன்றை செய்து கொடுங்கள்
ஒவ்வொரு நாளும் அப்பா என்பவர் தன்னுடைய குழந்தைகளுக்காக பல விஷயங்களை செய்து கொடுக்கிறார். உங்களுக்கு பிடித்த பொம்மைகளை வாங்கி கொடுப்பார், உங்களுக்கு பிடித்த படங்களுக்கு கூட்டிச் செல்வார். இப்படி ஏராளமான விஷயங்களை அவர் செய்வார். ஆனால் நீங்கள் அவருக்கு என்ன செய்தீர்கள். இந்த தந்தையர் தினத்திலாவது அவருக்கு பிடித்த விஷயங்களை அவருக்கு நீங்கள் செய்து கொடுக்கலாம். அவர் ரசிக்கும் பொழுது போக்கு விஷயங்களை நீங்கள் செய்து கொடுக்கலாம். அவருடன் சிறிது நேரம் செலவிடுங்கள். இதுவே அவருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை பெற்றுத் தரும்.

இந்த தந்தையர் தினத்தில் உங்கள் தந்தையை நீங்கள் சிறப்பாக உணர வைக்கலாம். பரிசுப் பொருட்கள் மூலம் அவரை ஆச்சர்யப்படுத்துவது, வீட்டில் ஸ்பா அமைத்து கொடுப்பது, ஓய்வெடுக்க நேரம் கொடுப்பது, அவரை புத்துணர்ச்சியாக வைக்க பானங்கள் தயாரித்து கொடுப்பது போன்ற பல விஷயங்களை நீங்கள் செய்து வரலாம். இதற்கு நீங்கள் ஆடம்பரமாக செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர் ரசிக்கும் விதத்தில் விளையாட்டு அல்லது வெளிப்புற நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லலாம். அவருக்கு பிடித்த இடங்களுக்கு சாலைப் பயணம் மேற்கொள்ளலாம். அவரை கடற்கரைக்கு அழைத்துச் செல்லலாம். அவருக்கு பிடித்த இசை கச்சேரி அல்லது இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுக்கலாம். இந்த மகிழ்ச்சியான தருணங்களை உங்கள் கேமராவில் படம் பிடிக்க மறந்து விடாதீர்கள்.

பரிசுப் கூப்பனை பரிசளியுங்கள்
இந்த தந்தையர் தினத்தில் நீங்களாகவே கிரியேட்டிவ் ஆக ஒரு பரிசு கூப்பனை தயார் செய்யலாம். இதன் மூலம் அவருக்கு விருப்பமான எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும். இந்த தந்தையர் தினம் உங்களுக்கு சிறப்பான அமைய வாழ்த்துக்கள். இந்த மறக்க முடியாத நினைவுகளை புகைப்படமாக எடுத்து அதையும் உங்கள் தந்தைக்கு நீங்கள் பரிசாக வழங்கலாம்.

Maha

Next Post

காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த நபரை விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்த மர்மகும்பல்…..! காரைக்குடி அருகே பயங்கரம்……!

Sun Jun 18 , 2023
காரைக்குடி காவல் நிலையத்திற்கு ஒரு வழக்குக்காக கையெழுத்து போட வந்த ஒரு நபரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்திருக்கிறது. அதாவது தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்ற மதுரையைச் சேர்ந்த வினித் என்பவரை வழிமறித்து அந்த மரண கும்பல் கொலை செய்திருக்கிறது. சம்பவ இடத்திலிருந்து வினீத்தின் நண்பர்கள் 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் காரணமாக […]

You May Like