நவீன காலகட்டத்தில் நம் உணவு பழக்க வழக்கங்களும், அன்றாட நடைமுறைகளும் மாறிவிட்டன. இதனால் அடிக்கடி வெளியே சாப்பிடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் போன்ற சத்துக் குறைவான உணவு முறைகளை உண்பதையே பின்பற்றி வருகிறோம்.
இவ்வாறு உண்பதால் நம் உடல்நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. புது புது விதமான நோய்களும் நம்மை தாக்குகிறது. தற்போது கல்லீரல் வீக்கம் ( fatty liver) நோய் பலரையும் பாதிக்கிறது. இந்த நோய் பாதிப்பதற்கு தவறான உணவு பழக்க வழக்கங்களும், அன்றாட நாம் செய்யும் செயல்களுமே காரணம். கல்லீரல் வீக்கம் ஏற்படாமல் தடுக்க உணவு கட்டுப்பாட்டுடன் இந்த 4 பொருட்களை தண்ணீரில் சேர்த்து குடித்து வரலாம்.
1. எழுமிச்சை – வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் அதிகம் நிறைந்துள்ள எலுமிச்சை பழத்தை அடிக்கடி ஜூஸாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
2. இஞ்சி – செரிமானத்திற்கு உதவி புரியும் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சிக்கு இயற்கையாகவே நோய்கள் மற்றும் அலர்ஜிகளை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இஞ்சியை நன்றாக கழுவி தோலுடன் சிறிதாக வெட்டி சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்
3. மஞ்சள் – மஞ்சளில் குர்க்குமின் என்ற அமிலப்பொருள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்கள் போன்றவை நிறைந்துள்ளன. மஞ்சள் இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராடும் பண்புடையது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கல்லீரல் வீக்கம் நீங்க சுடுதண்ணீரில் மஞ்சள் போட்டு குடித்து வரலாம்.
4. கிரீன் டீ ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் அதிகம் உள்ள கிரீன் டீ குடிப்பதன் மூலம் கல்லீரலில் வீக்கத்தை குறைக்கலாம். க்ரீன் டீ குடிப்பது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதோடு புதுப்புது செல்கள் உருவாகுவதை அதிகரிக்கிறது.