fbpx

வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. எப்படி தற்காத்து கொள்வது..? நிபுணர்களின் அட்வைஸ் இதோ..

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது..

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. இதற்கு ஒமிக்ரானின் XBB.1.16 என்ற துணை மாறுபாடு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கண்டறியப்பட்ட XBB.1.16 கொரோனா மாறுபாடு, புதிய அலைக்கு வழிவகுக்கும் என்று பலர் கணித்துள்ளனர்.. எனவே மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், வைரஸின் பரவலைக் குறைக்கவும், விழிப்புடன் இருப்பதும் அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் தடுப்பு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத் துறையின் இயக்குநர் டாக்டர் சோனியா ராவத் இதுகுறித்து பேசிய போது “ தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.. அடுத்த சில மாதங்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. கொரோனா பரவல் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் வைரஸின் பிறழ்வு ஆகும்.

வைரஸ் மாற்றமடைந்தாலும், குழு நோய் எதிர்ப்பு சக்தியின் (Herd Immunity) காரணமாக அதன் முந்தைய வகைகளை போல ஆபத்தானதாக இருக்காது. தடுப்பூசி காரணமாக மக்கள் மத்தியில் ‘குழு நோய் எதிர்ப்பு சக்தி’ அதிகரித்துள்ளது.. மேலும் நோய்த்தொற்றின் தாக்கம் ஓரளவு குறைக்கப்படும். இருப்பினும், கொரோனா வழிகாட்டுதல்கள் குறித்து எந்த கவனக்குறைவும் இருக்கக் கூடாது. முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்..” என்று தெரிவித்தார்..

டெல்லி மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அனில் பன்சால் இதுகுறித்து பேசிய போது “ கொரோனா வைரஸ் மாற்றமடைந்துள்ளது, இதன் காரணமாக அதிகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றுக்கும் வானிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் எந்த வகையிலும் அலட்சியமாக இருக்கக்கூடாது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து இதேபோல் அதிகரித்து, அதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், வரும் காலங்களில் கொரோனாவின் புதிய அலை ஏற்படலாம்.. இந்த நேரத்தில், பலர் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டதால், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது.. ஆனால் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், புற்றுநோய், காசநோய் மற்றும் எச்.ஐ.வி உள்ளிட்ட பிற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்தகைய நபர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளதால், அவர்களுக்கு விரைவில் தொற்று ஏற்படும்… அத்தகைய நபர்களுக்கு, கோவிட்-19 தொற்று மிகவும் ஆபத்தானது. குழந்தைகள் மற்றும் வயதானவர்களை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்..

சமூக விலகல், சானிடைசர் பயன்பாடு மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

Woww...! ஆறு மாதத்திற்கு ஒருமுறை 5,000 ரூபாய் உதவித்தொகை...! இவர்களுக்கு மட்டும் தான்...! முழு விவரம்

Tue Mar 28 , 2023
நாட்டுப்புறப்பாடல் கலைஞர்கள் உட்பட அனைத்து கலைஞர்களையும் பாதுகாக்க ‘கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை’ பெயரில் கலாச்சாரத் துறை அமைச்சகம் ஒரு திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான உதவித்தொகை மற்றும் கௌரவத்தொகை திட்டம் 3 பிரிவுகளைக் கொண்டுள்ளது. பல்வேறு கலாச்சார துறைகளிலும், இளைய கலைஞர்களுக்கு உதவித்தொகை விருது, பல்வேறு கலாச்சாரத் துறைகளில், சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மூத்த மற்றும் இளையோர் கௌரவத்தொகை விருது, […]
தீபாவளி

You May Like