ஆதார் அட்டை இன்று அதிகம் பயன்படுத்தப்படும் ஆவணமாக உள்ளது. ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய நோக்கத்திற்கும் ஆதார் அட்டையைப் பயன்படுத்துவதால் சில நேரங்களில் ஆதார் கார்டை தொலைத்துவிடும் சூழல் உள்ளது. அவ்வாறு தொலைந்து போன ஆதார் அட்டையை மீண்டும் ஆன்லைனில் எப்படிப் பெறுவது என்று, படிப்படியான செயல்முறையில் இந்த பதிவில் பார்க்கலாம்.
☞ முதலில் UIDAI uidai.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்…
இதற்குப் பிறகு, பயனர் இழந்த அல்லது மறந்துவிட்ட EID/UID ஐக் கிளிக் செய்ய வேண்டும்.
☞ அதன் பிறகு கீழே காட்டப்பட்டுள்ள My Aadhaar -ஐ கிளிக் செய்யவும்.
பின்னர் நீங்கள் EID அல்லது ஆதார் எண்ணை திரும்பப் பெற விரும்புகிறீர்களா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.
☞ பிறகு பயனர் தனது முழுப்பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கேப்ட்சா எனப்படும் ரகசிய குறியீட்டை டைப் செய்ய வேண்டும்.
☞ அடுத்ததாக பயனர்கள் OTP பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, சரிபார்ப்பிற்காக உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு OTPயைப் பெறுவீர்கள்.
☞ அதன் பிறகு OTP ஐ டைப் செய்ய வேண்டும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியில் உங்கள் ஆதார் எண் மற்றும் பதிவு ஐடியைப் பெறுவீர்கள்.
☞ உங்கள் ஆதார் அட்டை தொலைந்துவிட்டால், ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் போலீசில் புகார் செய்வதும் நல்லது. இல்லையெனில் யாராவது உங்கள் ஆதாரை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.