ஜிபூட்டியில் இருந்து ஏமன் நோக்கிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 15 குழந்தைகள் உட்பட 109 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 116 பேரைக் காணவில்லை. நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்த படகு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியின் ஓபோக் நகருக்கு வடக்கே அக்டோபர் 8ஆம் தேதி இரவுக்கும் 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுமார் 350 பேரை ஏற்றிச் சென்ற […]

நேபாளத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மீண்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெரும் இயற்கைப் பேரிடரை சந்தித்துள்ள நாட்டில், புதிய மழை மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இதுவரை 1,453 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,000-க்கும் […]

அமெரிக்காவின் புகழ்பெற்ற கிராண்ட் கேன்யன் பகுதியில் திடீரென ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்த வெள்ளத்தில் பெரிய பாறைகள், இரும்பு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டு கொலராடோ ஆற்றில் கலந்ததாக அமெரிக்க தேசிய பூங்கா சேவை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Bright Angel Creek பகுதியில் இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நீரோடை கொலராடோ ஆற்றில் கலக்கும் நிலையில், சில […]