fbpx

கட்சியின் பெயர், கொடியை எப்படி பயன்படுத்தலாம்..? எடப்பாடி வழக்கில் பதிலளிக்க ஓபிஎஸ்-க்கு உத்தரவு..!!

அதிமுக பெயர், கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருவதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணையமும் அவரை அங்கீகரித்து கடிதங்கள் அனுப்பின.

இந்நிலையில், அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி, தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொதுச்செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் கூறி வருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் தங்கள் தரப்பு பதிலை தாக்கல் செய்ய குறுகிய கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஓபிஎஸ் பதிலளிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார்.

Chella

Next Post

மாரடைப்பு ஏற்பட போவதை நம்மால் முன்பே உணர முடியுமா....? அப்படி ஏற்பட்டால், நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி....?

Thu Sep 21 , 2023
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பல இளைஞருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. வயதான நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமான விஷயம் தான். இளம் வயதை சார்ந்தவர்களுக்கு கூட இந்த மாரடைப்பு ஏற்படுவது இன்றைய உணவு முறையின் காரணமாகத்தான் என்று தான் சொல்ல வேண்டும். இளைஞர்களை ஒரு புறம் வைத்தால் ,இன்னொரு புறம் சிறுவர், சிறுமிகளுக்கு கூட இந்த மாரடைப்பு தற்போது ஏற்படுகிறது. இதெல்லாம் எதை காட்டுகிறது என்றால், தற்காலத்து உணவு முறை […]

You May Like