ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மொபைல், லேப்டாப்பில் எப்படி இலவசமாக பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
16-வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இந்த முறை ஐபிஎல் டைட்டிலை டாடா நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதைத் தொடர்ந்து ப்ளே ஆஃப், 3ஆம் இடத்திற்கான போட்டி மற்றும் ஃபைனல் மேட்ச் ஆகியவை நடைபெறவுள்ளன. கடந்த ஐபிஎல் மற்றும் அதற்கு முந்தைய போட்டிகள் சிலவற்றை ரசிகர்கள் ஹாட்ஸ்டார் ஆப் மூலமாக மொபைலில் பார்த்தனர். இந்த சீசனின் ஒளிபரப்பு உரிமையை ஜியோ சினிமா பெற்றுள்ளது.
அதன்படி, நடப்பு ஐபிஎல் தொடரை எந்த கட்டணமும் இல்லாமல் 4K HD தரத்துடன் ஜியோ சினிமா தளங்களில் பார்த்து மகிழலாம். ஸ்மார்ட் டிவி, மொபைல் போனில் ஐபிஎல் தொடரை இலவசமாக பார்க்க JIO CINEMA என்ற ஆப்பை டவுண்லோட் செய்து பார்க்கலாம். லேப்டாப்பில் பார்க்க விரும்புவோர் jiocinema.com என்ற தளத்திற்கு சென்று அதன் மூலம் பார்த்து மகிழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, போஜ்புரி உள்ளிட்ட 12 மொழிகளில் வர்ணனை செய்யப்படவுள்ளது. இதில் தேவைப்படும்போது எந்த கமென்டரியையும் மாற்றிக் கொள்ளலாம். முதல் போட்டியில் குஜராத் – சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி தொடங்குகிறது.