fbpx

120 மில்லியன் டாலர் மதிப்பில் பிரம்மாண்ட பங்களா.. காதலியுடன் ரகசியமாக வாழ்ந்து வரும் ரஷ்ய அதிபர் புடின்..?

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக இந்த போர் பார்க்கப்படுகிறது. இந்த போர் தொடங்கியது முதலே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தவறாமல் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்..

அதிபர் விளாடிமிர் புடின் இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார்..? உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.. புடினுக்கு ஆபத்தான நோய்கள் இருப்பதாகவும், அவர் நீண்ட காலம் உயிருடன் இருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் உயிர் வாழ மாட்டார் என்று ரஷ்யாவின் முன்னாள் எம்பி இலியா பொனோமரேவ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்..

இந்த நிலையில், வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தற்போது புடின், தனது காதலி அலினா கபேவாவுடன் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.. சுமார் 120 மில்லியன் டாலர் செலவு செய்து, ஆடம்பர பங்களாவில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது..

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடமேற்கில் அமைந்துள்ள பிரமாண்டமான பங்களாவில், புடின் இரகசியமாக வசித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 13,000 சதுர அடி கொண்ட இந்த மாளிகையின் கட்டுமானப் பணிகள் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் நிறைவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ரஷ்ய பாணியில் கட்டப்பட்டுள்ளது என்றும், அதில் பிரம்மாண்ட அறைகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம் உள்ளது என்றும் கூறப்படுகிறது…

ரஷ்ய ஜனாதிபதி புடின், தனது 39 வயது காதலியான அலினா கபேவாவுடன் அங்கு வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு புடினின் குழந்தைகள் மற்றும், அலினா கபீவாவின் சில உறவினர்களும் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. புடினின் காதலி என்று கூறப்படும் அலினா கபேவா, ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார்.. நீண்ட காலமாகவே அவர் புடினின் புதிய காதலி என்று வதந்தி பரவியது. கடந்த 2014-ம் ஆண்டு, ரஷ்யாவின் தேசிய ஊடக குழுவின் தலைவராக அலினாவை விளாடிமிர் புடின் நியமித்தார்..

எனினும் விளாடிமிர் புடினின் தனிப்பட்ட விருந்துகளில் கலந்து கொண்ட சில அதிகாரிகள், புடின் – அலினா இருவரையும் ஒன்றாக பார்த்ததில்லை என்றும் ஆனால் இருவருக்குள்ளும் உறவு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்..

Maha

Next Post

#TNPSC: தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்...!

Sat Mar 4 , 2023
குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசுத் துறைகளில், குரூப் 2 மற்றும் 2A பணிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த 25-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பிரதானத் தேர்வில், பல முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தேர்வு எழுதிய […]

You May Like