fbpx

தமிழ்நாட்டில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னையில் மார்ச் 24ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து மார்ச் 24ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. இந்த முகாம் கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.

இதில், 8, 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இம்முகாம் மூலம் பணி நியமனம் பெறும் இளைஞர்களில் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov) பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அடுத்த 2️ மணி நேரத்தில் தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்….!

Wed Mar 22 , 2023
தமிழகத்தில் கோடை வெயில் பொளந்து கட்ட தொடங்கிய சூழ்நிலையில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. கடுமையான வெயிலின் காரணமாக, அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த திடீர் மழை மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக்காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் நிகழ்வு காரணமாக, தமிழகத்தில் மழை தொடர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று […]

You May Like