fbpx

காலையிலேயே பயங்கரம்…! விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து…! 40 படகுகள் எரிந்து சாம்பல்…!

விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து. இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 40 படகுகள் எரிந்து சாம்பலாகின. அடையாளம் தெரியாத நபர்கள் படகுகளுக்கு தீ வைத்ததாக மீனவர்கள் புகார் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு படகில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சாம்பலானதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கொழுந்துவிட்டு எரிந்த தீயை அதிகாரிகள் கடல் படகுகள் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

படகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தீயில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது தெரியாத நபர்களால் செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். தீயில் கருகிய படகுகளின் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு கதறி வாழும் காட்சி அங்கு உள்ளவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

Vignesh

Next Post

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு என்றும் துணை நிற்போம்!… கோப்பையை வென்ற ஆஸி. அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Mon Nov 20 , 2023
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய வீரர்களுக்கு இன்றுபோல் என்றும் துணை நிற்போம் என்று கூறியுள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில், உலகக்கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், […]

You May Like