fbpx

ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம்..!! அண்ணாமலை வாகனங்கள், அறையில் அதிரடி சோதனை..!!

கர்நாடகாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், அதைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது, அந்த ஹெலிகாப்டரில் மூட்டைகளில் பணம் கொண்டு வரப்பட்டதாக கர்நாடகாவின், கப்பு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொர்கி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றார். அதன்பேரில், அண்ணாமலையின் அறை, வாகனங்கள், அவர் வந்த ஹெலிகாப்டர் என அனைத்தையும் தேர்தல் அதிகாரிகள் முழுமையாக சோதனை நடத்தினர். தீவிர சோதனைக்கு பின் பேசிய தேர்தல் அதிகாரி சீதா, விதிகளை மீறும் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என கூறினார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Chella

Next Post

சொத்து வரி செலுத்த மீண்டும் சலுகை வழங்கியது சென்னை மாநகராட்சி..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Tue Apr 18 , 2023
சென்னையில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் அரையாண்டுக்கான சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது. முதல் 15 நாட்களுக்குள் வரியை செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5000 வரை வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடப்பாண்டுக்கான சொத்து வரியை செலுத்தியவர்களுக்கு சென்னை மாநகராட்சி ஊக்கத்தொகை வழங்கியது. அதாவது 15 நாட்களில் மட்டும் ரூ.275 […]

You May Like