பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் அதன் விலை பன்மடங்கு உயர்ந்து வருகிறது.. இதனால் பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட பல மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உணவுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இதனால் பொது இடங்களில் வழங்கப்படும் உணவை பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்..
இந்நிலையில் பாகிஸ்தானில் நாடு முழுவதும் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. ஒரே நேரத்தில் 22 மாவட்டங்களில் பல மணி நேர மின் தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.. இதனால் அந்நாட்டு அரசை விமர்சித்து சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.. இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பல நகரங்களில் மணிக்கணக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. மின் இணைப்புக் கோளாறு காரணமாக பாரிய மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன..
குவெட்டா உட்பட பலுசிஸ்தானின் 22 மாவட்டங்களில் மின்சாரம் இல்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன… கடந்த ஆண்டு அக்டோபரில், பாகிஸ்தானில் ஒரு பெரிய மின்வெட்டு ஏற்பட்டது, கராச்சி மற்றும் லாகூர் உட்பட நாட்டின் பெரும் பகுதிகளுக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..