fbpx

அவமானப்படுத்திய மாயா..!! கதறி அழுத அர்ச்சனா..!! முதல் நாளே நடந்த ட்விஸ்ட்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பல்வேறு புதுமைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிக்பாஸ் வீட்டில் இருந்து கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர், தனக்கு சுவாரஸ்யம் இல்லாததாக தோன்று 6 பேரை சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது விதி.

இந்த வார கேப்டனான பூர்ணிமா, புதிதாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அர்ச்சனா, அன்னபாரதி, பிராவோ, கானா பாலா, தினேஷ் ஆகிய 5 பேரையும் தேர்வு செய்து சுமால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு கருப்பு ஆடாக விசித்ராவையும் அனுப்பி வைத்திருக்கிறார். ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் இடையே சண்டையை ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி பிக்பாஸ் போட்டியாளர்கள் முன்னரே பேசிவைத்து விசித்ராவை அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கு நன்றிக்கடனாக இந்த வார நாமினேஷனில் விசித்ராவை தாங்கள் நாமினேட் செய்ய மாட்டோம் என டீல் பேசி அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்நிலையில் மாயாவும், அர்ச்சனாவும் தற்போது சண்டை போட்ட புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

தான் வீட்டுக்குள் வந்தபோது மாயா தன்னை வரவேற்காமல் அவமானப்படுத்தியது பற்றி அர்ச்சனா கேட்டதும், அதையெல்லாம் இங்க எதிர்பார்க்கக்கூடாது என மாயா காட்டமாக பதிலடி கொடுக்கிறார். எதிரியாவே இருந்தாலும் அவர்களிடம் 5 நிமிடம் பேசுவதில் என்ன ஆகப்போகிறது என அர்ச்சனா கேட்கிறார்.

அதற்கு மாயா நக்கலாக சிரிக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து அர்ச்சனா, அழுததும், அவரை கட்டிப்பிடிக்க மாயா செல்ல, நான் என்னை அவமானப்படுத்தியவரை கட்டிபிடிக்க மாட்டேன் என அர்ச்சனா அழுதபடி கூறுகிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் வந்த முதல் நாளே இப்படி அழ வச்சி வேடிக்கை பார்க்குறீங்களே டா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Chella

Next Post

தேர்தல் பிரச்சாரம் செய்த எம்பிக்கு கத்திக்குத்து..!! மர்ம நபரை சரமாரியாக தாக்கிய தொண்டர்கள்..!! பெரும் பரபரப்பு..!!

Mon Oct 30 , 2023
தெலங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் சந்திரசேகர ராவ் போராடி வருகிறார். அந்த வகையில், பிஆர்எஸ் கட்சியின் சார்பில் துப்பாக் சட்டசபை தொகுதிக்கு மேடாக் எம்பி பிரபாகர் ரெட்டி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், சித்திபெட் மாவட்டத்தில் தவுலதாபாத் பகுதியில் சுரம்பள்ளி […]

You May Like