மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் மனோஜ் (56). மும்பை போரிவிலி பகுதியில் கடை வைத்திருக்கும் மனோஜூக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில், மும்பை அகமத் நகரைச் சேர்ந்த சரஸ்வத் (36) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சரஸ்வதி குடும்பம், உறவினர்கள் என்று யாரும் இல்லாத நிலையில், இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, உடலுறவு வைத்துக் கொள்வது வரையில் சென்றது. அதன் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்து, திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தனர்.
மும்பை கீதா நகர் பகுதியில், தனியே அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் கடந்த 3 வருடங்களாக வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு ஒத்து வராத காதலி சரஸ்வதியை கொலைச் செய்ய மனோஜ் முடிவெடுத்தார். இந்நிலையில், மீண்டும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், சரஸ்வதியை சரமாரியாக அடித்து உதைத்து, அரிவாளால் வெட்டிக் கொலைச் செய்துள்ளார் மனோஜ். பின்னர், போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பதற்காக கொடூரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
காதலி சரஸ்வதியின் உடலை மரம் அறுக்கும் எந்திரத்தைக் கொண்டு துண்டு துண்டாக வெட்டி, உடல் உறுப்புகள் அனைத்தையும் தனித்தனியே பிரித்துள்ளார். அதன் பின்னர் அந்த உறுப்புகளை ஒரு பெரிய குக்கரில் போட்டு வேக வைத்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் நடந்து 2 நாட்களுக்குப் பின்னர் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார், மனோஜின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது சரஸ்வதியின் முகம் மட்டும் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மேலும் சோதனையிடுகையில், சரஸ்வதியின் உடல் உறுப்புகள் அனைத்தும் வெட்டப்பட்டு பாதி பாதியாக கிடந்துள்ளது. சமையலறையில் குக்கரில் வேக வைத்த நிலையில் மீதி உடல் உறுப்புகள் இருந்துள்ளன. ஒரு பிளாஸ்டிக் கவரில் அந்த உறுப்புகளை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்த போலீசார், வீட்டிலிருந்த மனோஜைக் கைது செய்தனர்.
சரஸ்வதியின் உடலில் சில உறுப்புகள் மாயமாக்கி உள்ள நிலையில், அந்த உறுப்புகள் குறித்து மனோஜிடம் தீவிர விசாரணை நடத்துகையில், சமைத்து நாய்க்கு போட்டதாக கூறியுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.