fbpx

அடக்கொடுமையே..!! சூட்கேஸில் ஆடையின்றி கிடந்த சிறுமி..!! பெங்களூரு To சேலம்..!! அதிரவைத்த ஐடி தம்பதி..!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் வைகுந்தம் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள சர்வீஸ் சாலையோர பாலத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி கடுமையான துர்நாற்றம் வந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் விஏஓ ஜெயகுமார், மற்றும் சங்ககிரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அதிகாரிகளும் உடனடியாக விரைந்து வந்து, பாலத்தின் அடிப்பகுதியில் இருந்த சூட்கேஸை கண்டெடுத்தனர்.

அந்த சூட்கேஸில் பெண்ணின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் காணப்பட்டது. இந்த சடலத்தை சங்ககிரி கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதுடன், அந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த பகுதிக்கு கார் ஒன்று வந்து சென்றது சந்தேகத்தை கிளப்பியது. இதனால் அந்த காரை அடையாளம் கண்டனர். அதன் உரிமையாளர், பெங்களூருவில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருவது தெரியவந்தது. எனவே, அந்த நபரை பற்றி தீவிரமாக விசாரித்து கொண்டிருந்தபோதே, அவரது மனைவி திடீரென தலைமறைவானார். இதனால் அவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் கிளம்பியது.

பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தம்பதி இருவரும் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனால், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். தம்பதி இருவரும் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்தவர்கள். கணவன் பெயர் அபினேஷ் சாகு (41), மனைவி பெயர் அஸ்வின்பட்டில் (37). இருவருமே காதல் திருமணம் செய்தவர்கள். இருவருமே பெங்களூரு அருகே பானத்தூர் பங்கனபள்ளியில் தங்கி ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கின்றான்.

அபினேஷ்ஷின் தந்தை ஆதரவற்றோர் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்தாண்டு இந்த ஆசிரமத்திற்கு சென்ற அபினேஷ், சுமைனா என்ற 15 வயது சிறுமியை, தன்னுடைய வீட்டு வேலைக்காக அழைத்து வந்துள்ளார். சம்பவத்தன்று அபினேஷ் மனைவி அஸ்வின்பட்டிலிடம் சிறுமியிடம் குடிக்க வெந்நீர் கேட்டுள்ளார். சிறுமியும் வெந்நீர் எடுத்த வந்தபோது கை தவறி, அஸ்வின்பட்டி மீது விழுந்துவிட்டது.

இதனால் கொந்தளித்துபோன அஸ்வின்பட்டி, பூரிக்கட்டையாலேயே சிறுமியை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். இதில் சிறுமி வலி தாங்க முடியாமல் கதறி, சோர்வடைந்தாள். அன்று மாலை வீட்டுக்கு வந்த அபினேஷ், சிறுமியை சரமாரியாக தாக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மனைவியையும் கோபமா திட்டியுள்ளார். பிறகு சிறுமியை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, மறுநாள் வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டார்.

பின்னர், மறுநாளும் சிறுமியிடம் வீட்டு வேலை செய்யும்படி அஸ்வின்பட்டில் சொல்லியிருக்கிறார். நடக்கவே தெம்பில்லாத நிலையில், அந்த சிறுமியும் வேலை செய்ய முயன்றுள்ளார். ஆனால், கீழே விழுந்து சிறுமி இறந்துவிட்டார். இதனால் பயந்துபோன அஸ்வின்பட்டில், போலீசில் சிக்கி கொள்வோம், ஜெயிலுக்கு சென்றுவிடுவோமே என்று பயத்தில் சடலத்தை மறைக்க முயன்றுள்ளார். இதை கணவரிடம் சொல்லி அவரையும் சம்மதிக்க வைத்துள்ளார். பிறகுதான், உடலை நிர்வாணமாக்கி, சடலத்துடன் சூட்கேசை அடைத்து காரில் சேலம் கொண்டு வந்து வீசிவிட்டு சென்றுள்ளனர். இவ்வளவும் வாக்குமூலமாக தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

Read More : ”டாக்டர் என் வாழ்க்கைய நாசமாக்கிட்டான்”..!! கணவரிடம் கதறியழுத மனைவி..!! வீடியோவை காட்டி பலமுறை பலாத்காரம்..!!

English Summary

Terrified, Ashwinbhattil tried to hide the body in fear of being caught by the police and going to jail.

Chella

Next Post

இன்ஸ்டாவில் இளம்பெண்ணுக்கு விரித்த வலை..!! ரூம் போட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய 2கே கிட்..!! பல்லாவரத்தில் பயங்கரம்..!!

Wed Oct 30 , 2024
Harish brought two of his friends and together they raped the girl.

You May Like