fbpx

வெளியூரில் கணவன்..!! அடிக்கடி வீட்டிற்கு வந்து மனைவியுடன் ஜாலி செய்யும் காதலன்..!! மந்தோப்பில் நடந்த பயங்கரம்..!!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சென்ட்ரிங் தொழிலாளி அசோக்குமார் என்ற வேலவன் (37). இவரது மனைவி சுகன்யா (33). இருவருக்கும் திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். வேலவன் பெங்களூருவில் சென்ட்ரிங் வேலை செய்து வருவதால் மாதம் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே வீட்டிற்கு வருவார்.

இதற்கிடையே, வேலவன் மனைவி சுகன்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சத்யமூர்த்தி (27) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து அவ்வபோது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதை அறிந்து கொண்ட சுகன்யாவின் கணவர் வேலவன் மனைவி மற்றும் சத்யமூர்த்தியை கண்டித்துள்ளார். இருப்பினும் சத்தியமூர்த்தியின் தொடர்பை சுகன்யா கைவிட மறுத்து தொடர்ந்து இருவரும் பழகி வந்துள்ளனர்.

இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட சுகன்யா தனது குழந்தைகளுடன் பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார், கணவர் வேலனும் பெங்களூருவில் இருந்து மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். நவம்பர் 1ஆம் தேதி இரவு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிராமத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி காண்பதற்காக தனது மனைவி குழந்தைகளுடன் சென்றுள்ளார்.

இதையடுத்து, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வேலனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டிய சத்யமூர்த்தி, வேலனை பின் தொடர்ந்து பிக்கனஅள்ளிக்கு சென்றுள்ளார். நடன நிகழ்ச்சியில் இருந்த வேலனை முக்கியமான விஷயம் பேச வேண்டும் என செல்போன் மூலம் சத்யமூர்த்தி அழைத்துள்ளார். அதனை நம்பி வேலவன், தனியாக அருகில் உள்ள மாந்தோப்பிற்கு சென்றுள்ளார். அங்கு சத்யமூர்த்தி ஏற்கனவே தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதுகுறித்து தகவலறிந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, வேலனின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சத்யமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read More : கொலஸ்ட்ரால் முதல் சர்க்கரை நோய் வரை..!! இந்த ஒரு ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..?

English Summary

Sukanya’s husband Velavan has condemned his wife and Sathyamurthy. However, Sukanya refused to give up Satyamurthy’s relationship and the two continued to get along.

Chella

Next Post

'சீனாவில் ராமாயணத்தின் சுவடு'!. ஆராய்ச்சியில் ஆச்சரியமான தகவல்!

Mon Nov 4 , 2024
'Ramayan's Footprints in China' Buried in Buddhist Texts: Chinese Scholars

You May Like