fbpx

குடும்ப வறுமைக்காக வெளிநாட்டிற்கு சென்ற கணவர் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் கஞ்சா போதையில் வந்து ஆடையை அகற்றி சிலுமிஷம் செய்த வாலிபர்…..! நடவடிக்கை மேற்கொண்டதா காவல்துறை……?

தமிழகத்தில் சட்டவிரோதமாக கலாச்சாராயம் காய்ச்சப்படுவதும், விற்பனை செய்யப்படுவதும் மிகப்பெரிய குற்றம். ஆனால் அந்த குற்றத்தையும் கடந்து, தற்போது இன்னொரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆனாலும், இதனை மாநில அரசும், காவல் துறையும் பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை.

போதை பொருளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று, மாநில அரசும், காவல் துறையும் தெரிவித்து வந்தாலும், தற்போது கஞ்சா விற்பனை என்பது நகரங்களை தாண்டி கிராமப்புறங்களிலும் வந்துவிட்டது.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்று இருக்கிறார். இவருடைய மனைவி லாவண்யா இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் தான், கடந்த ஆறு மாத காலமாக, தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற நபர், கஞ்சா போதையில், லாவண்யாவின் வீட்டிற்கு வந்து, பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.

சென்ற மூன்று மாதத்திற்கு முன்னர், லாவண்யா, மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு வழங்கியிருந்தார். ஆனாலும், இதுவரையில், அது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்து, தற்சமயம் லாவண்யா, கைக்குழந்தை மற்றும் பெற்றோருடன் மறுபடியும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து மனு வழங்கி இருக்கிறார்.

.

அத்துடன், அந்த கஞ்சா போதையில் இருந்த நபர், தன்னுடைய ஆடையை அகற்றி, ஆபாசமாக பொது இடங்களில் நடந்து கொள்ளும் வீடியோ காட்சிகளும், பொதுமக்களுக்கு இடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே உடனடியாக, இந்த போதை நபரை கைது செய்ய வேண்டும் என, லாவண்யா மறுபடியும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் வழங்கியிருக்கிறார்.

Next Post

இந்த பெண்களுக்கெல்லாம் மாதந்தோறும் ரூ.2,500..!! அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்..!! விண்ணப்பிப்பது எப்படி..?

Mon Aug 7 , 2023
கணவனை பிரிந்து வாழும் பெண்கள், விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், 18 முதல் 59 வயது வரை உள்ள விதவைகள் மற்றும் ஏழைப் பெண்களுக்கான பென்ஷன் திட்டத்தை டெல்லி அரசு அறிமுகம் செய்துள்ளது. பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை நன்றாக வாழ்வதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் அவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் தகுதியான பெண்களுக்கு அரசிடமிருந்து ரூ.2,500 பென்ஷன் தொகை வழங்கப்படும். இதில், […]

You May Like