கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்துள்ள ஓடையூர் பகுதியில் இருக்கின்ற சரவணன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் கடந்த 15 ஆண்டுகளாக தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கணவன், மனைவியான தங்கவேல்(65), தைலி (61) உள்ளிட்ட இருவரும் விவசாயம் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று காலை தோட்டத்து வீட்டில் தம்பதிகள் இருவரும் சடலமாக மீட்க பட்டு இருக்கிறார்கள். அவர்களுடைய தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ,ஏற்ப்பட்டுள்ளதால் அவர்களை கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் வாங்கல் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேரில் ஆய்வு செய்து வருகிறார் கணவன், மனைவி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.