ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள வி.சி. மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (40) இவரது மனைவி பானுமதி (34) இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 14 வருடங்களுக்கு கடந்துவிட்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளிட்ட இரு குழந்தைகள் இருக்கின்றன.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான தேவராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்ததால் அவர் கோபித்துக் கொண்டு சின்னதகர குப்பத்தில் இருக்கும் தன்னுடைய தாய் வீட்டில் வந்து வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் தன்னுடைய மாமியார் வீட்டிற்கு வந்த தேவராஜ் நேற்று குடித்துவிட்டு இரவு நேரத்தில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட தேவராஜின் மனைவி பானுமதி, தன்னுடைய கணவர் தேவராஜ் கட்டையால் அடித்திருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக வாலாஜா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.