fbpx

“குடிக்க காசு கேட்டா தரமாட்டியா.”? ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்.! மனைவிக்கு நேர்ந்த துயரம்.!

உத்திரபிரதேச மாநிலத்தில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருப்பது அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக தப்பியோடிய கணவன் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள சுரேந்திர நகர் பகுதியைச் சேர்ந்தவர் கௌரவ் கௌதம். இவரது மனைவியின் பெயர் கௌரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கௌதம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரிகிறது. தினமும் மது அருந்திவிட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று மது குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி இருக்கிறார் கௌதம். மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரது மனைவி கௌரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் வருவதை அறிந்த கௌதம் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கௌரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய கௌதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது இரண்டு குழந்தைகளும் உறவினர்களிடம் காவல்துறையால் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

Next Post

இன்ஸ்டாகிராமில் காதல் வலை.! 17 வயது மாணவி கடத்தல்.! சிக்கிய கூலித் தொழிலாளி.!

Sun Dec 3 , 2023
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி கடத்தப்பட்ட வழக்கில் ஹோட்டலில் கூலி வேலை செய்யும் நபர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் உனக்கு பதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி திருவண்ணாமலையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். […]

You May Like