fbpx

#பெரம்பலூர்: தனது மனைவி உள்பட பல பெண்களின் அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டி வந்த கணவர்..!

பெரம்பலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும் விமல்(31) என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் நாள் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், கணவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகாரளித்துள்ளார்.

அத்துடன், தான் கருப்பாக இருப்பதால் தன்னுடன் வாழ விரும்பம் இல்லை என்றும், அப்படி வாழ வேண்டுமென்றால் 50 சவரன் நகையை வரதட்சணையாக வாங்கி வர வேண்டும் என்றும் தினமும் கொடுமைப்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

இது மட்டும் அல்லாமல் விமலின் செல்போனை பார்த்தபோது, அதில் பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக்கொண்டிருந்துள்ளார் என்றும், அவ்வாறு உறவு வைத்துக் கொண்டதை வீடியோ எடுத்து, அதனை காட்டி அவர்களை மிரட்டி பணம் வாங்கி வருவதாகவும் கூறியுள்ளார். 

மேலும், தன்னுடன் தனியாக இருந்ததையும் வீடியோ எடுத்து வைத்து தன்னையும் மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.  இது பற்றி வழக்கு பதிவு செய்துள்ள பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விமலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

கொரோனாவால் 80% மக்கள் பாதிப்பு.. பலி எண்ணிக்கையை மறைக்கும் சீனா..?

Sun Jan 22 , 2023
2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வந்தது.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டாலும், தற்போது சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.. குறிப்பாக சீனாவில் முன்னெப்போதும் இல்லாத […]
’சீனாவில் கொரோனா அதிகரிப்பதற்கு இதுதான் காரணம்’..!! மத்திய அரசின் கொரோனா குழு தலைவர் முக்கிய தகவல்..!!

You May Like