fbpx

’Porn Videos’ பார்த்த கணவன்..!! கண்டித்த மனைவி..!! உயிருடன் தீவைத்து கொளுத்திய கொடூரம்..!!

குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞர் கிஷோர் படேல். இவரது மனைவி காஜல். இருவருமே மும்பையில் உள்ள வைர நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளனர். காஜல் ஏற்கனவே திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்தவர். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு குடும்பத்தாரின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது கிஷோர் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அதனை மனைவி பார்க்க வேண்டாம் என்று கண்டித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மறுநாள் திங்கட்கிழமை காலையிலும் வாக்குவாதம் தொடர்ந்திருக்கிறது. அப்போது ஆத்திரம் அடைந்த கிஷோர், தனது மனைவியை தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவந்ததை அடுத்து, கிஷோரை அதிரடியாக கைது செய்தனர். மேலும், 40 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் மனைவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு முன்பே நுரையீரல் பாதிப்பு இருந்ததால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில், தனது கணவர் பான் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை வீடியோவை நிறுத்தச் சொன்னதால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அந்த ஆத்திரத்தில் தீவைத்ததாக கூறியிருக்கிறார். இதுதொடர்பாக கிஷோரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

”வீட்டு சாப்பாட்டை மிஸ் பண்றீங்களா”..? ”இனி Zomato மூலம் ருசிக்கலாம்”..!! வந்தாச்சு புதிய வசதி..!!

Thu Feb 23 , 2023
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருக்கின்ற இடத்தில் இருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் உணவு கூட வீடு தேடி வருகிறது. அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து விட்டது. இந்நிலையில், Zomato நிறுவனம் புதிய சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வீட்டு உணவை மிஸ் செய்பவர்களுக்கு Zomato Every Day என்ற பெயரில் வீட்டு உணவு வழங்கும் சேவை […]

You May Like