fbpx

6 வருடங்களாக குழந்தை இல்லை.. பிளேடால் மனைவியின் அந்தரங்க உறுப்பில் கணவர் செய்த கொடூர செயல்..! 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் ரவீந்திரன். இவருக்கு திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால் கோபமடைந்த மனைவி அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று வந்த நிலையில், கணவன் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, மீண்டும் அவர்களுக்குள் குழந்தை பற்றி விவாதம். 

அப்போது ரவீந்திரன் மனைவியை கடுமையாக தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தாய் வீட்டிற்கு சென்றார். இவரது தாய் வீட்டில் கடந்த எட்டு மாதங்களாக இருந்துள்ளார். இதையடுத்து ரவீந்திரன் மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.

கடந்த 25ம் தேதி ரவீந்திரன் தனது மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட முயன்றார். ஆனால் அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவர் அவரை பிளேடால் தாக்கி அந்தரங்க உறுப்புகளை காயப்படுத்தினார். 

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து வலியால் துடித்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

#சிவகங்கை : தந்தையை நம்பாதே என மகனுக்கு ஆடியோ செய்தி அனுப்பிவிட்டு தாய் தற்கொலை..! 

Thu Dec 29 , 2022
சிவகங்கை மாவட்ட பகுதியின் அருகே கருப்பட்டியில் வசிப்பவர் பாண்டியன்(40) . மனைவி மகேஸ்வரி, 38. இவர்களுக்கு, 16 மற்றும் 9 வயதில், இரு மகன்கள் உள்ளனர். பாண்டியன் முதலில், சென்னையில் தொழில் பார்த்து வந்துள்ளார். மகன்களும் சென்னையில் படிக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் பாண்டியன், தன் சொந்த ஊரான கருப்பாபட்டிக்கு, மினரல் வாட்டர் நிறுவனம் நடத்த வந்தார். மகேஸ்வரி தனது மகன்களின் கல்விக்காக சென்னையில் தங்கினார்.  கணவர் மீது சந்தேகமடைந்த […]

You May Like