fbpx

நான் அரசியலுக்கு குழந்தை தான்.. ஆனா பாம்பை கண்டு பயம் இல்லாத குழந்தை..!! – தவெக தலைவர் விஜய்

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன ஆதியோன் திருவள்ளுவர் வழியில் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவராக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாக ஏற்று, சாதி, மத, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளோடு தமிழக வெற்றிக் கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கனும்னு நான் வரேன் என தவெக-வின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதனைத்தொடர்ந்து தவெக தலைவர் விஜய் மக்களிடையே உரையாற்றினார்.. அவர் பேசுகையில், “ஒரு குழந்தை அம்மா என்று சொல்லும்போது சிலிர்ப்பு வருமே.. அந்த குழந்தைக்கு சொல்லத் தெரியாத உணர்வு இருக்குமே.. அதை போல உங்கள் முன் நிற்கிறேன். பாம்பு எனும் அரசியலை கையில் பிடித்து விளையாடுவதுதான் உங்க தளபதி- நடிகர் விஜய்.. அரசியலுக்கு நாம குழந்தைதான்.. பாம்பாக இருந்தாலும் நமக்கு பயமில்லை என்பது கான்பிடெண்ட்.

அவர்கள் இவர்கள் எல்லாம் கிடையாது நாம் என்பது தான் நமது கொள்கை.. என் உயிர் மக்களுக்கே என உரக்க பேசுகையில், உணர்ச்சிவசப்பட்ட தவெக தலைவர், நான் நீ என்பது எல்லாம் இல்லை; நாம் என்பதுதான் நமது கோட்பாடு என கூறினார். தவெக தலைவர் உரக்க பேசுகையில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

Read more ; ”மாநில அரசுகளின் சுய மரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையற்றது”..!! தவெகவின் செயல்திட்ட அறிக்கை..!!

English Summary

I am a child of politics.. but a child who is not afraid of snakes..!! – TVK Vijay

Next Post

”கடவுள் மறுப்பில் உடன்பாடில்லை”..!! தவெக தலைவர் விஜய் அனல் பறக்கும் பேச்சு..!!

Sun Oct 27 , 2024
Let's accept leaders like Periyar, Kamaraj, Ambedkar as pioneers.

You May Like