fbpx

‘விஜயகாந்தின் கோபத்திற்கு நான் ரசிகன்’..!! ’நேர்மையானவரை இழந்திருப்பது ஒருவித தனிமை’..!! கமல்ஹாசன் உருக்கம்..!!

சென்னை தீவுத்திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எளிமை, நட்பு, உழைப்பு, பெருந்தன்மை இவ்வாறு அத்தனை வார்த்தைகளும் சேர்த்து ஒரே மனிதரை சொல்ல வேண்டும் என்றால் அது விஜயகாந்தை சொல்லலாம். அவர் நட்சத்திர அந்தஸ்து வருவதற்கு முன்பு அவர் எப்படி பழகினாரோ, அதேபோல் இறுதி வரை என்னிடம் பழகினார். எந்த அளவிற்கு அவரிடம் பணிவு இருக்கிறதோ, அதே அளவு நியாயமான கோபமும் இருக்கும்.

அவரது கோபத்தின் ரசிகன் நான். அதனால் தான் அவர் மக்கள் பணிக்கே வந்திருக்கிறார். இப்படிப்பட்ட நேர்மையானவர்களை இழந்திருப்பது ஒருவித தனிமை தான் என்னை போன்றவர்களுக்கு. இவரை போன்றவர்கள், இவர்களது ரசிகர்களை இவர்கள் போலவே உருவாக்கியிருப்பார்கள்” என்று பேசினார்.

Chella

Next Post

4 மாவட்ட ரேஷன் அட்டைகாரங்களுக்கு வந்தாச்சு குட் நியூஸ் .! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

Fri Dec 29 , 2023
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியது. இங்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பொது மக்களின் வீடு மற்றும் உடைமைகளும் கனமழையால் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்ததை போல தென் மாவட்டங்களான தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களுக்கும் […]

You May Like