பாஜக புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை.. புதிய தலைவருக்கான போட்டியில் நான் யாரையும் கைகாட்டவில்லை என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பாஜக அதிமுக கூட்டணி பற்றியும், அடுத்த மாநில தலைவர் பற்றியும் நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. அண்ணாமலை டெல்லி சென்றார், அவரை கைகாட்டினார், இவரை கைகாட்டினார் என்றெல்லாம் பேசப்படுகிறது. என்னை பொறுத்தவரையில் இந்த கட்சி நல்லா இருக்கனும். நல்லவர்கள் இருக்கக் கூடிய கட்சி. நல்ல ஆத்மாக்கள் இருக்கக் கூடிய கட்சி,
இந்த கட்சியில் நிறைய பேர் உயிரை கொடுத்து கட்சியை வளர்த்துள்ளார். நிறைய புண்ணியவர்கள் இருக்கக் கூடிய கட்சி, இந்த கட்சி எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறன். புதிய தலைவர் தேர்வு செய்யப்படும்போது நான் நிறைய பேசுவேன். இப்போது இதுகுறித்து நான் எதுவும் பேச முடியாது. நான் மாநிலத் தலைவர் போட்டியில் இல்லை என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறேன். இந்த பதவிக்கு நான் யாரையும் கைகாட்டவும் இல்லை. ” என திட்டவட்டமாக கூறினார்.
யார் அந்த தலைவர், அப்படி மாற்றப்பட்டால் அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்ற பல்வேறு கேள்விகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. புதிய பாஜக தலைவருக்கான ரேஸில் இப்போது நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உள்ளதாக கூறப்படுகிறது.