fbpx

மக்கள் சொல்லும் வரை முதலமைச்சர் பதவியில் அமர மாட்டேன்.. ராஜினாமா செய்கிறேன்..!! – அரவிந்த் கெஜ்ரிவால் பகீர் அறிவிப்பு

டெல்லி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்வர் பதவியில் அமர மாட்டேன், என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி முதலமைச்சராக இருப்பவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு இருந்தார். மதுபான முறைகேடு வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறி சிபிஐ தரப்பிலும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் திகார் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ அதிகாரிகள் மீண்டும் கைது செய்தனா். இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்வ்து, டெல்லியில் இன்று(செப்.,15) கட்சி தொண்டர்கள் மத்தியில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: கஷ்ட காலங்களில் எங்களுடன் இருந்த கடவுளுக்கு மிக்க நன்றி. பெரிய எதிரிகளுடன் போரிட்டுள்ளோம். நமது கட்சி தலைவர்கள் சத்யேந்திர ஜெயின், அமானதுல்லா கான் இன்னும் சிறையில் உள்ளார்கள். அவர்கள் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்கள் என நம்புகிறேன். இன்னும் 2 நாட்களில் டில்லி முதல்வர் பதவியில் இருந்து விலக உள்ளேன். 2 நாட்களில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார்.

முதல்வர் பதவியில் இருந்து விலகி ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை சந்திக்க உள்ளேன். நவம்பரில் மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுடன் டெல்லிக்கும் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலை சந்திக்க தயாராக உள்ளேன். நான் நேர்மையானவன் என மக்கள் தீர்ப்பளிப்பார்கள். நான் நேர்மையானவன் என என கருதினால் மக்கள் எனக்கு ஓட்டளிக்கட்டும். தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பிறகு தான், முதல்வர் நாற்காலியில் அமர்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

Read more ; ‘மேரேஜ் பண்ணிக்கலாம்..’ விவாகரத்தான பெண்களை குறிவைத்து மோசடி..!! மேட்ரிமோனியல் வெப்சைட்களின் பகீர் காரியம்

English Summary

I am resigning from the post of Chief Minister of Delhi. Arvind Kejriwal said, ‘I will not assume the post of Chief Minister until people judge that I am honestவ்

Next Post

நிரந்தர டெலிட்.. எல்லா இமெயிலும் காலி.. உங்க Gmail-ல மறக்காம இதை செஞ்சிடுங்க..!! Google வார்னிங்..

Sun Sep 15 , 2024
Google has decided to delete millions of G-mail accounts that have been opened around the world after September 20.

You May Like