fbpx

நம்பி தானே வந்தேன், இப்படி பண்ணிட்டியே….! 2 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்….!

இந்தியாவைப் பொறுத்த வரையில், பெண்களை ஆண்கள் சிலர் ஒருவித போதை பொருளாகவே பார்க்கிறார்கள். அதன் காரணமாகத்தான் இந்தியாவில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. அப்படி பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், அந்த சட்டங்கள் மூலமாக இந்த தவறுகள் தடுத்து நிறுத்தப்படவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.

அந்த வகையில், மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில், தன்னுடைய ஆண் நண்பர் ஒருவரோடு, இன்னொரு நண்பர் வீட்டிற்கு சென்ற ஒரு இளம் பெண்ணை, அந்த வீட்டில் இருந்த இரண்டு நபர்கள் மிரட்டி ஒரே நேரத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்ற சில தினங்களுக்கு முன்னர், பாதிக்கப்பட்ட அந்த பெண் தன்னுடைய ஆண் நண்பரோடு இன்னொரு நண்பரை சந்திப்பதற்காக, வேறு ஒரு வீட்டிற்கு சென்றார். அப்போது ஏதோ ஒரு காரணத்தை சொல்லி இந்த பெண்ணுடன் அந்த அந்த இளைஞரை, வெளியே அனுப்பிவிட்டு, அந்த வீட்டில் இருந்த மற்ற இருவரும் சேர்ந்து, தனியாக இருந்த அந்த பெண்ணை மிரட்டி, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அந்தப் பெண் அவர்களிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ முயற்சி செய்தும், அந்த பெண்ணால், அந்த காம கொடூரர்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அதன் பிறகு, இந்த சம்பவம் குறித்து, காவல் நிலையத்திற்கு சென்று புகார் வழங்கினார்.

மேலும், புகார் வழங்கியதோடு மட்டும் நின்று விடாமல், அந்த பெண்ணை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரின் அங்க அடையாளங்களையும் காவல்துறையினரிடம் தெரிவித்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்ததில், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஈடுபட்ட இரண்டு பேரும் காவல் துறையினரால், அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பிடிபட்ட அவர்கள் இருவர் மீதும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

Next Post

மன்னிப்பா..? மான நஷ்ட வழக்கா..? சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய வீரலட்சுமி..!!

Fri Sep 22 , 2023
மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று சீமானுக்கு வீரலட்சுமி நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அப்போது தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இதையடுத்து சீமானை வீரலட்சுமி கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், […]

You May Like