fbpx

’’விக்ரமின் டிமாண்டை என்னிடம் வலியுறுத்தினால் என்னால் வேலை செய்ய முடியாது’’..!! பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு..!!

பா.ரஞ்சித் இயக்கி விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் (ஆகஸ்ட் 5) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் நடிகர் விக்ரமிடம் மேடையில் மன்னிப்பு கேட்டார். அவர் பேசுகையில், “சார்பட்டா வெளியான பிறகு விக்ரம் சார் அடுத்த படத்தில் நாம் சேர்ந்து வேலை செய்யலாம் என்று சொன்னார். மற்ற கமர்ஷியல் நடிகர்கள் மாதிரி அவர் இருந்ததில்லை.

விக்ரம் சார் நான் சொல்வதை கேட்பாரா என்கிற பயம் எனக்கு இருந்தது. அவருக்கும் சில டிமாண்ட் இருக்கும். அதை என்மேல் வலியுறுத்தினால் என்னால் வேலை செய்ய முடியாது. அவரிடம் எனக்கு கதை கூட சரியாக சொல்ல வரவில்லை. என்னுடைய வார்த்தைகளில் இருந்து ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள முடியாது. அப்படி நான் பேசியபோது என்னுடைய ஆன்மாவில் இருந்து நான் சொல்ல வந்ததை புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன். விக்ரம் சார் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு தான் எனக்கு மிகப்பெரிய சவால் தொடங்கியது.

கலைக்காக தன்னை அர்பணித்த ஒருவரை நான் கையாள்வது எளிது கிடையாது என்பது எனக்கு தெரியும். அவரது கதாபாத்திரத்தை முடிந்த அளவிற்கு ஜனரஞ்சகமாக கொடுப்பதற்கு நான் முயற்சித்தேன். அவருடன் வேலை செய்தது மூலம் ஒரு கலைஞனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். விக்ரம் ஒரு ஆசிரியர். அவரிடம் நான் தான் கற்றுக்கொள்ளவேண்டும். இந்தப் படத்தின் போதும் அவருக்கு காயம் ஏற்பட்டு எலும்பு உடைந்துவிட்டது. வலி இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டு ஒகே தான் சொல்வார். இப்படத்திற்காக அவரை ரொம்ப கொடுமை செய்திருக்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள் சார்” என்றார்.

Read More : வங்கதேச அரசியலில் திடீர் திருப்பம்..!! சிறையில் இருந்து வெளிவருகிறார் முன்னாள் பிரதமர்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

English Summary

Directed by B. Ranjith and starring Vikram, Tangalan will hit the theaters on August 15.

Chella

Next Post

இந்துக்களுக்கு எதிரானதாக மாறிய பங்களாதேஷ் போராட்டம்..!! இந்திய-வங்காளதேச எல்லையில் உச்ச கட்ட பாதுகாப்பு!!

Tue Aug 6 , 2024
Govt In Contact With Bangladesh Army, Stresses Need To Protect Minorities After Attacks On Temples

You May Like