இனி வாழ்நாள் முழுவதும் செருப்பே போட முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை புறநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரண்செய், யூ டூ புரூட்டஸ் உள்ளிட்ட யூடியூப் சேனல்கள் இணைந்து நடத்திய பெரியார் குறித்த கருத்தரங்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பெரியார் எனும் பெரும் நெருப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “சில பேர் சில நேரங்களில் பேட்டி மட்டும் கொடுத்துவிட்டு கோவை ஏதோ சிலருக்கு சொந்தம் என்பது போல காட்ட முயல்கின்றனர்.
கோவை என்பது பெரியார் மண், திராவிட மண். இதை கோவை மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். சட்டமன்ற தேர்தலில் சொந்த ஊரில் விலை போகாத ஆடு, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என நினைத்து வந்தபோது iது பெரியார் மண் என்பதையும், தமிழ்நாட்டில் எங்கேயும் வேலையில்லை என்பதை உணர்த்தி அனுப்பி இருக்கிறோம். நான் தான் பெரிய அறிவாளி என நினைத்துக் கொண்டுள்ளார்.
தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொள்கிறார். செருப்பு போட மாட்டேன் என சொல்லும் தம்பிக்கு (அண்ணாமலை) நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் நடக்கும் ஆட்சியில் இனி வாழ்நாள் முழுவதும் செருப்பே போட முடியாது. கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். சாட்டையால் அடித்துக் கொண்டர், அரசியலுக்கு வந்தால் இரண்டே ஆண்டில் முதல்வராகி விடலாம் என நினைக்கிறார். முதல்வரின் உழைப்புக்கு கால் தூசிக்கு பெறாதவர்கள் எல்லாம் விமர்சிக்கின்றனர்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “செப்பல்தான் போடாமல் இருக்கிறேன். வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிவிட்டு மோசடி செய்து ஜெயிலுக்கு செல்லவில்லையே.. ஜெயிலுக்கு செல்வதும், மீண்டும் அமைச்சர் பதவியில் அருவதும் தான் தவறு. இதுகுறித்து உச்ச நீதிமன்றமே கேள்வி எழுப்பியது. தொடர்ந்து, மேடை போட்டு பாஜகவை திட்டுவது தான் திமுகவின் முழு நேர வேலையாக இருக்கிறது” என்று பேசியிருந்தார்.
Read More : மக்களே..!! நண்பகல் 12 to 3 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!