சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை கிரிக்கெட் வீரரும் நடிகருமான விஷ்ணு விஷால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இதில், சிஎஸ்கே படு மோசமான தோல்வியை சந்தித்தது. முதலில் விளையாடிய சிஎஸ்கே அணியின் ரச்சின் ரவீந்திரா 9 பந்தில் 4 ரன்களை எடுத்து சொதப்பினார். அதோடு 11 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து கான்வே அவுட் ஆனார். மற்றொரு பக்கம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய ராகுல் திரிப்பாதி 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
விஜய் சங்கரும் மோசமாக விளையாடி 21 பந்துகளில் 29 ரன்கள் அடித்தார். அதேபோல், 7 பந்துகளில் அஸ்வின் 1 ரன் மட்டுமே எடுத்தார். ஜடேஜா டக் அவுட் ஆனார். தோனி 1 ரன்னுக்கு அவுட் ஆனார். முதல் 8 ஓவர்களிலேயே சிஎஸ்கே 24 பந்துகளை டாட் வைத்தது. இடையில் தேவையின்றி களமிறக்கப்பட்ட ஹூடா டக் அவுட் ஆனார். இப்படி இறங்கிய
இதையடுத்து இறங்கிய கொல்கத்தா அணி எளிதாக இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. டி காக் 23 ரன்களும், சுனில் நரேன் 44 ரன்களை எடுத்தார். இதனால் எளிதாக இலக்கிற்கு அருகே சென்று கொல்கத்தா அணி 10.1 ஓவரில் 107/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த மேட்சை கிரிக்கெட் வீரரும், நடிகருமான விஷ்ணு விஷால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுபற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இதை பற்றி பேசக்கூடாது என்று இருந்தேன். ஒரு கிரிக்கெட்டராக இதை பற்றி கருத்து சொல்ல கூடாது இருந்தேன். ஒரு கிரிக்கெட்டராக நான் விரைவில் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால் இது கொடுமையான விஷயம். ஏன் இவ்வளவு லோ ஆர்டரில் விளையாட வேண்டும்.
எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதில் தோல்வியை தவிர்க்கவே விளையாட வேண்டும். ஆனால், இங்கு அப்படி நடக்கவில்லை.எதோ சர்க்கஸ் பார்க்க சென்றது போல் இருக்கிறது. விளையாட்டை விட எந்த ஒரு தனி மனிதனும் பெரியவனல்ல” என்று சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை மிக மோசமாக விமர்சனம் செய்திருக்கிறார்.