fbpx

”எனக்கு சாதி, மதம் வேண்டாம்”..!! சான்றிதழ் கொடுங்க”..!! பாராட்டிய ஐகோர்ட்..!! கடைசியில் ட்விஸ்ட்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்கக் கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே, எனக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ”சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க மாவட்ட தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை. பட்டியலில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, “சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டுக்குரியது.

அதே சமயம் இதுபோன்ற சான்றிதழ்களை வழங்கினால் சில பிரச்சனைகளும் ஏற்படும். இதுபோன்ற சான்றிதழை வழங்குவது சொத்து, வாரிசுரிமை மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அரசு உத்தரவுப்படி, கல்வி நிலையங்களின் விண்ணப்பங்களில், சாதி – மதம் தொடர்பான அந்த இடத்தை பூர்த்தி செய்யாமல், அப்படியே விட்டு விடலாம். அதற்கான உரிமை உள்ளது. அதை அதிகாரிகள் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. எனவே சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு உத்தரவிட முடியாது” என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Chella

Next Post

அந்த 4வருசம்!... நான் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை!… அவரை வைத்து ஓட்டவேண்டியிருந்தது!… OPS-ஐ சாடிய EPS!

Thu Feb 1 , 2024
அந்த நாலரை ஆண்டு காலம் நான் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இப்பொழுது வெளியில் ஒருத்தர் போயிருக்கிறார் அல்லவா, அவரை வைத்துக் கொண்டு நான் காலத்தை ஓட்ட வேண்டியதாக இருந்தது என்று எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராக இருந்தபோது நிகழ்ந்த அனுபவம் குறித்து வேதனை தெரிவித்தார். SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி […]
விரைவில் சந்திப்பு..!! பொறுத்திருந்து பாருங்கள்..!! ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

You May Like