fbpx

’உன் கூட வாழ எனக்கு இஷ்டம் இல்ல’..!! ’போலீஸ்காரர் என்னை நல்லா’…!! கள்ள உறவால் சிக்கித் தவிக்கும் கணவன்..!!

மதுரை மாவட்டம் புதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தயாளன் என்பவர், மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், கள்ள உறவில் தனது மனைவியை வைத்திருக்கும் காவலரின் பிடியிலிருந்து மீட்டு தரும்படி புகார் கூறியுள்ளார். இதுதொடர்பான அந்த புகாரில், “மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தயாளன் வயது 38. இவரது மனைவி மீனாட்சி இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

ஆட்டோ டிரைவர் தயாளன் வீட்டின் அருகே வசித்து வந்த தல்லாகுளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் செல்வராஜ். இவர், தயாளன் குடும்பத்தினரோடு பழகி அவரது மனைவியிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து காவலர் செல்வராஜின் மனைவி பாரதி ஏற்கனவே புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்டோ டிரைவர் தயாளன் எனது மனைவி மீனாட்சியை விட்டு விடுங்கள் என்று காவலர் செல்வராஜ் இடம் பேசியபோது தயாளனை செல்வராஜ் மிரட்டியுள்ளார்.

மேலும், உன் மனைவியை நான்தான் வைத்திருக்கிறேன் என்று ஆபாசமாகவும் பேசியுள்ளார். இது தெரிந்து தயாளன் தனது மனைவி மீனாட்சி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மீனாட்சி தயாளனுடன் வாழ முடியாது என விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கு முடியும் தருவாயில் உள்ளதால் உன் மனைவிக்கு நீ விவாகரத்து கொடுக்க வேண்டும் என காவலர் செல்வராஜ் தயாளனை மிரட்டியுள்ளார். எனவே, காவலர் செல்வராஜின் பிடியில் உள்ள எனது மனைவியை மீட்டு தாருங்கள் என ஆட்டோ டிரைவர் தயாளன் புகார் மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டோ டிரைவர் தயாளன், ”நான் சொந்தமான வீடு கட்டிய நிலையில், அதன் கடனை அடைப்பதற்காக சென்னைக்கு வேலைக்கு சென்றேன். அப்போது, எனக்கும் என் மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. கடன் வாங்கியவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை.

இதற்கிடையே, நான் சிவகங்கை சென்றபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் என்னை மிரட்டியது. என் மனைவிக்கு விவாகரத்து கொடுத்து வெளியேறும்படி மிரட்டினார்கள். இந்த மிரட்டலின் பின்னணியில் காவலர் செல்வராஜ் இருப்பதை கண்டுபிடித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். எனது மனைவியை கடத்திய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Read More : ’மசாஜ் சிறப்பா இருந்துச்சு’..!! ’இப்போ அது எங்களுக்கு வேணும்’..!! பெண்களிடம் அத்துமீறிய வாலிபர்கள்..!! நடுரோட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

English Summary

He has filed a complaint to rescue his wife from the clutches of the constable who is keeping her in a fake relationship.

Chella

Next Post

நடிகர் அஜித்தின் மடியில் அமர்ந்திருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா..? தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான்..!!

Sat Sep 28 , 2024
Now a famous actor's photo is also going viral. In the photo, the actor is sitting on the lap of famous actor Ajith Kumar.

You May Like